காவல்நிலையத்தில் போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி நாஞ்சில் சம்பத் தொடர்ந்த மனு நாளை விசாரணை வருகிறது. 

அதிமுகவின் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்ததும் சசிகலாவையும் தினகரனையும் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதனால் ஆத்திரடமைடைந்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எடப்பாடிக்கு எதிராக கொந்தளிக்க ஆரம்பித்து விட்டனர். தற்போது தீவிர விசுவாசிகளான நாஞ்சில் சம்பத்தும், புகழேந்தியும் டிடிவிக்கு இரு கரங்களாக செயல்பட்டு வருகின்றனர். 

டிடிவி ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்  ஒரு படி மேலே போய் தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார். 

மேலும் பாஜக பற்றியும் அக்கட்சியின் தமிழிசை சவுந்திரராஜன் பற்றியும் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

இதைதொடர்ந்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனை கடுமையாக விமர்சித்ததாக நாஞ்சில் சம்பத் மீது 8 வழக்குகள் பதியபட்டுள்ளன.

இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி நாஞ்சில் சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நாளை உயர்நீதிமன்றத்தில் வர உள்ளது.