உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் காந்தி சிலையை பார்த்து கதறி கதறி அழும்  வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

 

மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  உத்தரபிரதேச மாநிலத்தில் சாம்பல் பகுதியில் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் காந்தியின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.  இந்நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பெரோஸ் கான் தனது கட்சித் தொண்டர்களுடன் காந்தி சிலையை சுத்தப்படுத்தி மரியாதை செலுத்தினார்.

 

அப்போது சிலைக்கு கீழே மண்டியிட்ட பெரோஸ்கான்  ”ஐயா... எங்களை விட்டு எங்கு சென்றீர்கள்... கடினமாக உழைத்து விடுதலை வாங்கிக் கொடுத்தீர்களே... ஆனால் இப்போது எங்களுடன் நீங்கள் இல்லையே...  நீங்கள் இல்லாதது எங்களுக்கு வேதனை அளிக்கிறது என கத்தி கதறினார், அவர்  சிலைக்கு  கீழ் நின்று குமுறி குமுறி அழுவதை ஏராளமானோர் நின்று  வேடிக்கையாகப் பார்த்தனர். 

 

அப்போது அவருடன் இருந்த மற்றொரு தொண்டரும் பெரோஸ்கானைப் பார்த்து கதறினார். அங்கிருந்தவர்களில்  யாரோ ஒருவர் இதை  வீடியோ எடுத்து,  சமூக வலைதளத்தில் பரப்ப, இந்த காட்சி நாடுமுழுவதும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டீஸன்கள், பெரோஸ்கானும் அவரது தொண்டர்களும் சிறந்த நடிகர்கள் என்றும், இவர்களுக்கு ஆஸ்கார் விருதே கொடுக்கலாம் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு பெரோஸ்கானை வச்சு செய்துவருகின்றனர்.