sahunis in admk tweet by ramadoss

அதிமுக.,வில் அடிமைகள் மட்டுமே இருப்பார்கள் என்று நினைத்தேன், ஆனால் அங்கே சகுனிகளும் இருக்கிறார்களே என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் கூறிய டிவிட்டர் கருத்து நீண்ட விவாதத்துக்கு வழிகோலியிருக்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இன்று காலை மதுரை பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு கொடியேற்ற ஓ.பன்னீர்செல்வம், ஆதரவாளர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடுத்து, அந்த விழாவை புறக்கணிப்பதாக ஒரு தரப்பு கூற, அதிமுக.,வில் பிளவு நீடிக்கிறது என்று செய்தி பரவியது. 

இந்நிலையில், அதிமுக., எம்.பி., மைத்ரேயன், தான் முன்னதாகக் குறிப்பிட்ட விஷயத்தினை இது உறுதிப் படுத்துவதாக உள்ளது என்று குறிப்பிட்டார். இரு அணிகள் இணைந்தாலும் இன்னும் மன ரீதியாக இணையவில்லை என்று அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், “மதுரையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கொடியேற்று விழாவுக்கு ஓ.பி.எஸ்ஸை அழைக்காமல் அவமதிப்பு: செய்தி - அங்கு அடிமைகள் மட்டுமே இருப்பார்கள் என நினைத்தால் சகுனிகளும் இருக்கிறார்களே!” - என்று டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் பாமக., நிறுவுனர் ராமதாஸ். 

இதற்கு பலர் பின்னூட்டம் இட்டு வருகின்றனர். அதில், சகுனியுடன் தானே நீங்களும் சூதாடிக்கிட்டிருந்தீங்க..” என்ற ரீதியில் கருத்துகளை கூறி வருகின்றனர். 

Scroll to load tweet…