ஓபிஎஸ் கழுத்தில் காவித் துண்டு.. பாஜகவில் சேருகிறாரா பன்னீர்.. விழுந்து விழுந்து சிரித்த சி.டி ரவி..
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்விக்கு தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி பரபரப்பு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு :-
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்விக்கு தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி பரபரப்பு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு :-
ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையில் அதிமுக இயங்கிவரும் நிலையில் கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இந்த கோரிக்கையில் உறுதியாக இருந்து வருகின்றனர். இதையொட்டி 23 ஆம் தேதி நடந்த முடிந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் அவமானப் படுத்தப்பட்ட நிலையில், அதிலிருந்து அவர் வேகவேகமாக வெளியேறினார். கட்சியிலிருந்து ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டு விட்டார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் அன்று மாலையே அவர் டெல்லி புறப்பட்டார்.
இதையும் படியுங்கள்: மேயர்னா இஷ்டத்துக்கு முடிவு எடுப்பீங்களா.?? பிரியா ராஜனை அலறவிட்ட கே.கே நகர் தனசேகர்
24 ஆம் தேதி மறுதினமே குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கலில் கலந்து கொண்டார் அவர். அப்போது பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டதாகவும், ஆனால் அலுவல் காரணமாக நேரம் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் தனது டெல்லி முக்கிய பிரமுகர்கள் வாயிலாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கவனத்திற்கு தனது நிலைமையை கொண்டு சேர்த்து விட்டதாக தகவல் வெளியானது. பின்னர் அங்கிருந்து சென்னை திரும்பிய ஓபிஎஸ்சிடன் டெல்லி பயணம் எப்படி இருந்தது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மகிழ்ச்சியாகவே இருந்தது என அவர் பதிலளித்தார்.
பின்னர் தேனி சென்று அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது. தேனியில் மற்றொரு நிகழ்ச்சிக்காக கூடியிருந்த பாஜகவினர் அப்போது ஓ.பன்னீர் செல்வத்தே வரவேற்று காவி துண்டை அவரது தோளில் போட்டு ஆதரவு தெரிவித்தனர். அதற்கான புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியானது. அது ஓ. பன்னீர்செல்வம் பாஜகவில் இணையப் போகிறாரா என்ற கேள்விக்கு வித்திட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி ஓபிஎஸ் பாஜகவில் சேருவார், விரைவில் அவர் அங்கு செல்ல போகிறார் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: அதிமுக பொதுக்குழு கூட்டம் எங்கு நடைபெறும்? ஆய்வுக்கு பின் முடிவை அறிவித்தது அதிமுக!!
இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவியிடம் தனியார் ஊடகம் எடுத்த பேட்டியில் அவர் சில புதிய தகவல்களை கூறியுள்ளார். அதாவது ஓ.பன்னீர் செல்வத்தை பாஜகவில் சேர்த்துக் கொள்ளப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு சிரிப்பையே பதிலாக கொடுத்துள்ள அவர், அப்படியான கேள்வி தற்போது எழவில்லை, இது யூகத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்வி, அனுமானத்தின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை, முதலில் இது குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டு தெளிவு பெறுங்கள், பின்னர் அது குறித்து நான் கருத்து சொல்லுகிறேன். என சி.டி ரவி கூறியுள்ளார்.