Asianet News TamilAsianet News Tamil

சபரிமலை நடை திறக்கப்பட்டது…. பெண்களை அனுமதித்தால் நடையை மூடிவிடுவோம்…. குமுறும் மேல் சாந்தி !!

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை சரியாக மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. அதே நேரத்தில் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால் கோவிலைப் பூட்டி சாவியை ராஜ குடும்பத்திடம் ஒப்படைப்போம் என  மேல்சாந்தி மீண்டும் கடுமையாக எச்சரித்தார்.


 

sabarimalai temple opeb fir worship
Author
Sabarimala, First Published Nov 5, 2018, 5:14 PM IST

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற  உச்சநீதிமன்ற  உத்தரவுக்கு ஐயப்ப பக்தர்களிடையே  கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்பினர் கேரளாவில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டன

sabarimalai temple opeb fir worship

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது 2 இளம்பெண் போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானம் நோக்கி செல்ல முயன்றனர். பக்தர்களின் கடும் எதிர்ப்பால் அவர்கள் பாதி வழியிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர்.

மேலும் சபரிமலையில் பக்தர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி ஐயப்ப பக்தர்களை விரட்டி அடித்தனர். இதனால் சபரிமலையில் பதட்டமான சூழ்நிலை உருவானது.
sabarimalai temple opeb fir worship
அதே சமயம் சபரிமலை சன்னிதானத்தில் தந்திரிகள், கோவில் ஊழியர்களும் 18ம் படி அருகே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண் பக்தர்களை சன்னிதானத்துக்குள் நுழைய விட மாட்டோம் என்று அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைந்தால் கோவிலை பூட்டி சாவியை ராஜகுடும்பத்திடம் ஒப்படைப்போம். கோவில் நடையை சாத்தி சுத்தி கலச பூஜை நடத்தப்படும் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு அறிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

sabarimalai temple opeb fir worship

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலை கோவிலில் ஐதீகத்தை மீறி பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தால் கோவில் நடையை அடைத்து சுத்திகலச பூஜை நடத்தப்படும்” என்று அவர் கூறினார். இதனால் சபரிமலை கோவில் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios