Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக மாநில அரசின் முதல் பெண் உள்துறை செயலர் ரூபா ஐபிஎஸ்..! சசிகலா விடுதலை தள்ளி போகுமா..?

கர்நாடக மாநிலம் .பெங்களூரு பிரிவு ரயில்வே துறை ஐ.ஜியாக இருந்த ரூபா மாநில அரசின் உள்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இதன்மூலம் கர்நாடகாவில் உள்துறை செயலாளராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை ரூபா ஐபிஎஸ் பெற்றுள்ளார். 

Rupa IPS becomes first female Home Secretary of Karnataka Will Sasikala postpone release?
Author
Karnataka, First Published Aug 5, 2020, 9:09 AM IST

கர்நாடக மாநிலம் .பெங்களூரு பிரிவு ரயில்வே துறை ஐ.ஜியாக இருந்த ரூபா மாநில அரசின் உள்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இதன்மூலம் கர்நாடகாவில் உள்துறை செயலாளராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை ரூபா ஐபிஎஸ் பெற்றுள்ளார். 

Rupa IPS becomes first female Home Secretary of Karnataka Will Sasikala postpone release?

யார் இந்த ரூபா ஐபிஎஸ்....? 

 கர்நாடக மாநிலம் தாவனகரேவில் பிறந்தவர் டி.ரூபா. இவர் 2000ஆம் ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில் 43வது இடத்தைப் பிடித்தார்.இதையடுத்து கர்நாடக கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கினார். முதலில் தார்வாத் மாவட்டத்தின் எஸ்.பியாக நியமிக்கப்பட்டார். தனது நேர்மையான மற்றும் அதிரடியான நடவடிக்கைகளால் புகழ் பெற்றார். 2013ல் சைபர் கிரைம் காவல்துறை தலைவராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 2017ஆம் ஆண்டு வரையிலான 17 ஆண்டுகால சேவையில் 41 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Rupa IPS becomes first female Home Secretary of Karnataka Will Sasikala postpone release?

2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கத்தை பெற்றுள்ளார். 2017ஆம் ஆண்டு ஜூலையில் கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜியாக மாற்றப்பட்டார். அப்போது சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு விஐபி சலுகைகள் அளிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.இதுபற்றிய விஷயங்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தியவர் ரூபா ஐபிஎஸ். அதாவது, சிறையில் தான் விரும்பிய நேரத்தில் வெளியே சென்று வரவும், விரும்பிய உணவுகளை சமைத்து சாப்பிட வசதியும் சசிகலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் அளித்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாக ரூபா பகிரங்கமாக தெரிவித்தார்.

Rupa IPS becomes first female Home Secretary of Karnataka Will Sasikala postpone release?
இந்த நிலையில் கர்நாடக மாநில அரசின் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் ரூபா. முதல் பெண் உள்துறை செயலாளர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார் இவர்.உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ரூபா மாநில அரசின் ஊழல் அதிகாரிகளை உலுக்கி எடுத்துவிடுவார் என்கிற பயத்தில் அதிர்ந்து போய்கிடக்கிறார்களாம்.

ஆகஸ்ட் 15ம  தேதி சசிகலா  சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று எல்லோராலும் பேசப்பட்டும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் ரூபா ஐபிஎஸ் அம்மாநில அரசின் உள்துறை செயலராக பொறுப்பேற்றிருப்பது சசிகலா விடுதலையில் சிக்கல் ஏற்படும் என்றே கருதப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios