சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, சிகிச்சைப் பலனளிக்காமல், கடந்த ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி காலமானார். அவருக்கு காடுவெட்டியில் நினைவு மண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான வேலைகளும் நடந்தது.

இந்நிலையில், நாளை  குருவின் பிறந்தநாள் விழா அனுசரிக்கப்பட உள்ளதால். இந்த விழாவில் கலந்துகொண்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த குருவின் குடும்பத்தினரைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை உடையார்பாளையம் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். பாமக கட்சி நிர்வாகிகளுக்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.  வி.ஜி.கே மணி ஏற்கனவே பாமகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை பரிந்துரை செய்தது. 

அதன் அடிப்படையில், 144 பிரிவின் கீழ் வி.ஜி.கே மணி  மற்றும் அவரின் ஆதரவாளர்கள் காடுவெட்டி மற்றும் மீன்சுருட்டி பகுதியில்  இன்று முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை  நுழைய தடை விதித்து உடையார்பாளையம் ஆர்டிஓ உத்தரவிட்டுள்ளார்.  வழுவூர் மணி ஏற்கனவே பாமகவில் இருந்து நீக்கப்பட்டவர்  என்பதால் இந்தஉத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

அன்புமணிக்கு பெரும் தலைவலியாக மாறப்போகும் விஜிகே மணி.... என்ன செய்யப்போகிறது பாமக?

இவர் ஏற்கனவே, பாமகவுக்கு எதிராக காடுவெட்டி குருவின் மகனை தன்னோடு வைத்துக் கொண்டு  குருவின் குடும்பத்தை அழிக்க இருக்கும் பா.ம.க. வை எதிர்த்து, வருகிற பிப்ரவரி 1-ம் தேதி காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளன்று, புதிய கட்சி தொடங்கி பாமக-வுக்கு தக்க பாடம் புகட்டுவோம்” என சபதமெடுத்தார். இதனால் நாளை பாமகவுக்கு எதிராக இப்படி ஏதாவது வன்முறை சம்பவங்கள் நடக்குமோ என்ற எண்ணத்தில் இப்படியான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.