RSS to arrange a rally? - Karunas

ஜெயலலிதா வழியில் நடைபெறும் ஆட்சி என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவது துரோக செயல் என்று எம்எல்ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியாரசு கூறியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரையில் வரும் 8 ஆம் தேதி என்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைக்க உள்ளார். 1925 ஆம் ஆண்டு விஜயதசமி தினத்தில் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆண்டுதோறும் விஜயதசமி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த வருடம் ஆர்.எஸ்.ஏஸ். ஊர்வலம் கொண்டாடப்பட உள்ளது. மதுரையில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, இந்த ஊர்வலத்தை துவக்கி வைக்க உள்ளார்.

மதுரை, ராமராயர் மண்டபம், மதிச்சியம் என்ற இடத்தில் இந்த ஊர்வலம் துவங்க உள்ளது.

அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை துவங்கி வைக்க உள்ளதாக வந்த வந்த தகவலை அடுத்து, எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் இம்மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜு தொடங்கி வைப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் நடைபெறும் ஆட்சி எனக் கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைப்பது துரோகச் செயல் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தால் சமூக அமைதி கெடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.