Asianet News TamilAsianet News Tamil

கதிகலங்க வைத்த ஆர்.எஸ்.பாரதி கைது... முன் ஜாமீன் கேட்டு தயாநிதி- டி.ஆர்.பாலு நீதிமன்றத்துக்கு ஓட்டம்..!

தாங்களும் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம் என்பதால் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன்  ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். 
 

RS Bharti arrested in Katigalanga ... Dayanidhi-DR Baalu runs to court seeking bail
Author
Tamil Nadu, First Published May 23, 2020, 1:46 PM IST

தாங்களும் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம் என்பதால் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன்  ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

 RS Bharti arrested in Katigalanga ... Dayanidhi-DR Baalu runs to court seeking bail

"தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிஅது திமுக பிச்சை போட்டதாக ஆர்.எஸ்.பாரதி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அடுத்து தயாநிதிமாறன், நாங்கள் என்ன மூன்றாம் தர, தாழ்த்தப்பட்ட மக்களா? எனப்பேசியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைகள் ஓய்வதற்குள் ஒரு விவாத நிகழ்ச்சியில்,  முடி திருத்துவதை "அம்பட்டையன் கடை" என்று சாதியை வைத்து இழிவாகக் பேசினார் திமுக எம்.எல்.ஏ., பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இதுவும் சர்ச்சையாக வெடிக்க, சமூகநீதி, சமத்துவம் என வெளியே வேடம் போடும் திமுகவினர் தொடர்ந்து இப்படி சாதிவன்மத்தோடு பேசுவது எல்லாம் என்ன நியாயம்? என நாலாபுறமும் கேள்விகள் எழுந்தன. RS Bharti arrested in Katigalanga ... Dayanidhi-DR Baalu runs to court seeking bail

இதனை அடுத்து இன்று காலை பட்டியலின மக்களை இழிவாக பேசிய வழக்கில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தார். இந்த சம்பவம் நடைபெற்று ஒரு சில மணிகளில் முடிதிருத்தும் நிலையங்களுக்கு ஒரு சமூகத்தின் பெயரை குறிப்பிட்டு விரிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.RS Bharti arrested in Katigalanga ... Dayanidhi-DR Baalu runs to court seeking bail

இதனை அடுத்து தாங்களும் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம் என்பதால் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன்  ஆகியோர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரியுள்ளனர்.பிற்பகலில், காணொலி மூலம் நீதிபதி நிர்மல்குமார் மனுவை விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios