ஆர்.எஸ்.பாரதி வெறும் டிரைலர் தான்.. இனிமேதான் திமுக எதிராக குரல்கள் எழும்.. கொளுத்தி போடும் ஜெயக்குமார்.!

அதிமுகவில் பிரிவு என்பதே இல்லை. மக்கள் இயக்கமான அதிமுகவில் பிளவு என்பதே இல்லை.  ஒ.பி.எஸ். நீக்கப்பட்டதை பிளவாக பார்க்க முடியாது. சமுத்திரம் போல் உள்ள அதிமுகவில் இருந்து ஒரு சொட்டு நீக்கப்பட்டால் சமுத்திரம் அழிந்துவிடாது. துரோகிகளை மீண்டும் இணைப்பது என்பதோ, கூட்டணி என்பதோ கிடையாது. 

RS Bharathi is just a trailer... Former Minister Jayakumar

ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தான் அழைப்பு வந்துள்ளது, ஓ.பன்னீசெல்வத்துக்கு இல்லை என ஜெயக்குமார் கூறியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவுநாளையொட்டி சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய பிரமுகர்களும் மரியாதை செலுத்தினார். 

RS Bharathi is just a trailer... Former Minister Jayakumar

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- அதிமுகவில் பிரிவு என்பதே இல்லை. மக்கள் இயக்கமான அதிமுகவில் பிளவு என்பதே இல்லை.  ஒ.பி.எஸ். நீக்கப்பட்டதை பிளவாக பார்க்க முடியாது. சமுத்திரம் போல் உள்ள அதிமுகவில் இருந்து ஒரு சொட்டு நீக்கப்பட்டால் சமுத்திரம் அழிந்துவிடாது. துரோகிகளை மீண்டும் இணைப்பது என்பதோ, கூட்டணி என்பதோ கிடையாது. 

இதையும் படிங்க;- எங்களுக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் எம்எல்ஏ,எம்பி, அமைச்சராகி விட்டனர்- ஆர் எஸ் பாரதி வேதனை

RS Bharathi is just a trailer... Former Minister Jayakumar

ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு தான் அழைப்பு வந்துள்ளது, ஓ.பன்னீசெல்வத்துக்கு இல்லை. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. திமுகவில் உள்ள பிரச்சனையை ஆர்.எஸ்.பாரதி உள்ளக் குமுறலாக வெளிப்படுத்தியுள்ளார்.

RS Bharathi is just a trailer... Former Minister Jayakumar

திமுகவில் உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை என்பது கடைக்கோடி தொண்டருக்கும் தெரியும். திமுகவில் முதல் ஆளாக ஆர்.எஸ்.பாரதி குரல் கொடுத்துள்ளார். அடுத்தடுத்த குரல்கள் எழும். முதல்வர் ஸ்டாலின் திமுகவை பற்றியோ, ஆட்சியை பற்றியோ கவலையில்லை. அவரது மகனுக்கு முடிசூட்டுவது குறித்தே சிந்தித்து வருகிறார் என ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;-  அவங்க வேற! நாங்க வேற! அந்த மூன்று பேருக்கும் அதிமுகவில் எப்போதும் இடமில்லை.. ஜெயக்குமார் திட்டவட்டம்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios