பெட்டி பெட்டியாக பணம்..! மூட்டை மூட்டையாக சிக்கியது! துரைமுருகனை போட்டுக் கொடுத்தது யார்..?
வேலூரில் கட்டு கட்டாக கட்டி பெட்டியாகவும் பணம் சிக்கிய விவகாரத்தில் துரைமுருகன் மாற்றி அதன் பின்னணியில் முக்கிய பிரமுகர் ஒருவர் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
வேலூரில் கட்டு கட்டாக கட்டி பெட்டியாகவும் பணம் சிக்கிய விவகாரத்தில் துரைமுருகன் மாற்றி அதன் பின்னணியில் முக்கிய பிரமுகர் ஒருவர் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை வருமானவரித்துறையினர் துரைமுருகன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சல்லடையாக சோதனை நடத்தியும் எதுவும் கிடைக்கவில்லை. 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் திமுகவின் தேர்தல் வியூகம் தொடர்பான சில ஆவணங்களும் மட்டுமே வருமான வரித்துறையிடம் சிக்கியது. ஆனால் சுமார் 25 கோடி ரூபாய் வரை துரைமுருகன் தரப்பு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய தயார் செய்து வைத்திருப்பதாக உளவுத் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே வெள்ளிக்கிழமை அன்று சோதனை நடைபெற்றது.
முதலில் சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை துரைமுருகன் தரப்பு வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. சோதனைக்கான உத்தரவு நகலை கொண்டுவந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற திமுக வழக்கறிஞர் அணி அவர்களை அனுப்பி வைத்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில்தான் துரைமுருகனுக்கு சொந்தமான அந்த கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த பணம் வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக வருமான வரித்துறை சந்தித்துள்ளது.
சுமார் 25 கோடி ரூபாய் பணத்தை ஒரே நாளில் மாற்றி பல இடங்களுக்கு அனுப்பி வைத்திருக்க முடியாது என்பதால் ஏதோ ஒரு இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும் என்று வருமான வரித்துறையினர் தொடர்ந்து துரைமுருகன் தரப்பில் உள்ள அனைவரையும் கண்காணித்து வந்தது. இந்த நிலையில்தான் காட்பாடியில் உள்ள காவல் நிலையத்திற்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான் பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சகோதரிக்கு சொந்தமான குடோனில் துரைமுருகன் தரப்பின் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு கட் செய்துள்ளனர்.
இந்த தகவல் உடனடியாக தேர்தல் பறக்கும் படையினர் வருமான வரித்துறைக்கும் சென்றுள்ளது. மின்னல் வேகத்தில் செயல்பட்ட வருமான வரித்துறையினர் துணை ராணுவத்தினர் உடன் சென்று பணத்தை அள்ளியுள்ளது. இந்த விவகாரத்தில் துரைமுருகன் தரப்பை போட்டுக் கொடுத்தது வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் நிர்வாகிகளில் ஒருவர் தான் என்று துரைமுருகன் தரப்பே சந்தேகிக்கிறது.
ஏனென்றால் பூஞ்சோலை சீனிவாசன் துரைமுருகனின் நண்பராக இருந்தாலும் கட்சியில் அவரை பொறுப்புகள் எதுவுமே கொடுக்காமல் தான் துரைமுருகன் வைத்திருந்தார். எனவே துரைமுருகன் சீனிவாசன் இடையிலான நட்புறவை அறிந்த ஒருவர் தான் இந்த தகவலை போலீசாருக்கு கசியவிட்டு இருக்கும் வேண்டும் என்றும் திமுக தரப்பு கருதுகிறது.