Asianet News TamilAsianet News Tamil

அரசு பள்ளியில் சேர்ந்தால் தலா ரூ.1000... பெற்றோருக்கு ரூ 10,000 ஊக்கத்தொகை..!

புதிதாக சேரும் மாணவர்களுக்கு பரிசுகளும், சலுகைகளும் வழங்கி, அரசு பள்ளியில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

Rs.1000 per person if they join a government school ... Rs.10,000 incentive for parents ..!
Author
Tamil Nadu, First Published Jul 1, 2021, 6:11 PM IST

அரசு உயர்நிலைப்பள்ளியில் சேரும் மாணவர்களின் பெயர்களில் ஆயிரம் ரூபாய் வைப்புத்தொகையும், குலுக்கலில் பெற்றோருக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கி மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 55 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் வளர்ச்சிக்கு, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியருடன் இணைந்து பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.

Rs.1000 per person if they join a government school ... Rs.10,000 incentive for parents ..!
 
அந்தவகையில், 2021–2022 புதிய கல்வியாண்டு மாணவர்கள் சேர்க்கை துவங்கிய நிலையில், முன்னாள் மாணவர்கள் 10 பேர் தலைமையாசிரியர் சரவணனுடன் இணைந்து, புதிதாக சேரும் மாணவர்களுக்கு பரிசுகளும், சலுகைகளும் வழங்கி, அரசு பள்ளியில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர்.

அதற்காக புதிதாக இந்த கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களின் பெயரில், அஞ்சலகத்தில் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தும், பெற்றோர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குலுக்கல் முறையில் 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்குவதாக அறிவித்தனர். அதன்படி சேர்க்கை துவங்கிய சில தினங்களில் 14 மாணவர்கள் பள்ளியில் தற்போது சேர்ந்துள்ளனர். அவர்களின் பெயர்களில், அஞ்சலகத்தில் துவங்கிய கணக்கு புத்தகத்தை நேற்று பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஜான்பாக்கியம் செல்வம், தலைமையாசிரியர் சரவணன் மற்றும் கிராம மக்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.Rs.1000 per person if they join a government school ... Rs.10,000 incentive for parents ..!

இதுகுறித்து தலைமையாசிரியர் சரவணன் கூறுகையில், ‘’பள்ளி வளாகத்தில் மாணவர்களின் மன அமைதிக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் மரங்களும், சேதபக்தியையும், பொது அறிவையும் வளர்த்துக்கொள்ளும் விதமாக தலைவர்கள், அறிஞர்கள் படங்கள், அவர்கள் குறிய கருத்துகள், பொது அறிவுகள் சுவர் முழுவதும் எழுதப்பட்டுள்ளது. தற்போது பலரும் தனியார் பள்ளியை நோக்கி செல்லுகின்றனர். அவர்களின் கவனத்தை அரசு பள்ளியின் பக்கம் திரும்ப வேண்டும் என, பள்ளியின் முன்னாள் மாணவர் வை.கோவிந்தராசு 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.

Rs.1000 per person if they join a government school ... Rs.10,000 incentive for parents ..!

நானும் எனது பங்குக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன். மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என பள்ளியில் புதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் பெயரில் தலா 1,000 ரூபாய் வீதம் அஞ்சலகத்தில் வைப்பு வைக்கப்படும். மேலும் கற்றலுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மேலும் வெகுதொலைவிலிருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு வாகன வசதி செய்து தரப்படும்’’என தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios