ஏழைகளுக்கு உணவு வழங்க கலைஞர் பெயரில் தமிழகம் முழுவதும் உணவகங்கள் அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

ஏழைகளுக்கு உணவு வழங்க கலைஞர் பெயரில் தமிழகம் முழுவதும் உணவகங்கள் அமைக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக நேற்று தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று காலை திமுக தலைவர் ஸடாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

திமுக தேர்தல் அறிக்கை விவரம்:-


* கொரோனா நிவாரணமாக ரேஷன் அட்டை தாரர்களுக்கு ரூ. 4000 வழங்கப்படும்.

* அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குக்கு தனி நீதிமன்றம் அமைக்கப்படும்.

* ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும்

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தப்படும்

* பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.4 குறைக்கப்படும்

* சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும்

* கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வரும் வரை சொத்துவரி உயர்த்தப்படாது

* சட்டப்பேரவை நிகழ்வு நேரலையாக டி.வி.யில் ஒளிபரப்பு

* இந்து ஆலயங்களை சீரமைக்க ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* தேவாலயங்களை சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும்

* தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்

* விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

* பத்திரிகையாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்

* கலைஞர் உணவகம் அமைக்கப்படும்

* மகளிர் பேறுகால உதவித்தொகை ரூ 24-ஆயிரமாக உயர்வு

* மகளிர் பேறுகால விடுமுறை 12 மாதமாக உயர்த்தப்படும்

* பள்ளியில் 8-ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம்

* கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை

* மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் அமைக்கப்படும்

* பள்ளிகளில் காலையில் மாணவர்களுக்கு பால் வழங்கப்படும்

* உள்ளூர் டவுன் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம்

* கூட்டுறவு நகை கடன் 5பவுன் வரை தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி

* பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாள்களுக்கு தீர்வு

* வடலூரில் வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்

* திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற தனி அமைச்சகம்

* நீட் தேர்வு ரத்து செய்யப்படும்

* தனியார் நிறுவனங்களிலும் இட ஒதிக்கீடு

* 200 தடுப்பணைகள் அமைக்கப்படும்

* ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தை அறிக்கையை விரைந்து பெற நடவடிக்கை

* மத்திய அரசு பள்ளிகள் அனைத்திலும் அனைத்து பள்ளிகளிலும் 8 ம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்க சட்டம்

* விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட்

* இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு

* பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள்

* இயற்கை வேளாண்மைக்கு என தனிப்பிரிவு அமைக்கப்படும்

* திருச்சி, மதுரை , சேலம், கோவையில் மெட்ரோ ரயில்

* சிறுகுறு விவசாயிகள் மின்மோட்டார் வாங்க ரூ.10 ஆயிரம் மானியம்

* பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க சைபர் போலீஸ் ஸ்டேசன் அமைக்கப்படும்

* வேலூர்,ஒசூர், ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம்

* பள்ளி மாணவர்களுக்கு தினமும் காலை நேரம் பால் வழங்கப்படும்

* கூட்டுறவு வங்கியில் 5 பவுன் உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக வழங்கப்படும்.

* அரசு உள்ளூர் பஸ்களில், பெண்களுக்கு இலவச பயணம்.

* தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.

* தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை (MLC) கொண்டு வரப்படும்.

* சட்டம் ஒழுங்கு பணியில் உயிரிழந்த போலீஸ் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்.

* கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

* நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனைபட்டா

* சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளில் குழாய் மூலம் குடிநீர்

* அனைத்து கிராமங்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படும்

* கடலோர பகுதிகளிலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

* அனைத்து அரசு வேலைவாய்ப்புகளில் பெண்கள் இடஒதுக்கீடு 30 ல் இருந்து 40 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

* சைபர் காவல்நிலையங்கள் செயல்படுத்தப்படும்.

* மகளிர் சுய உதவி குழுக்கள் நிலுவையில் வைத்துள்ள கடன் தள்ளுபடி செய்யப்படும் 

* அரசு பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கப்படும் 

* தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்படாது

* ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் 

* மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.