Asianet News TamilAsianet News Tamil

இந்த துயர செய்தியை கேட்டு ரொம்ப வேதனையா போச்சு!டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து, ரூ.10 லட்சம் நிதி உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Rs .10 lakh fund for families of Tasmac employees: CM Stalin announced
Author
First Published Mar 15, 2023, 3:17 PM IST

சிவகங்கை பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து, ரூ.10 லட்சம் நிதி உதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் கடந்த 3-3-2023 அன்று நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர் அர்ஜுனன் (வயது 46) என்பவர் தீக்காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் நடைபெற்றவுடன் டாஸ்மாக் நிறுவனம், உடனடியாக மூன்று இலட்சம் ரூபாயினை நிதியுதவியாக அர்ஜுனன் குடும்பத்தினருக்கு வழங்கி, அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஏற்று அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையுற்றேன்‌.

Rs .10 lakh fund for families of Tasmac employees: CM Stalin announced

அர்ஜுனனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து இலட்சம் ரூபாய் வழங்கிடவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

Rs .10 lakh fund for families of Tasmac employees: CM Stalin announced

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையவரை காவல் துறையினர் கைது செய்து, வழக்கு பதிவு செய்து உரிய மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios