கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை, அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

காணொலிக் காட்சி மூலம் நடைபெறும்‌ அனைத்து கட்சிக் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் தேவைகள், மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசித்தார். 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பேசிய அவர், ’’கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் தர வேண்டும்’’ என்பன உள்ளிட்ட தீர்மானங்களை அவர் முன் வைத்துள்ளார்.