rowdies in deepa meeting
ஆர்கே நகர் இடைத் தேர்தலையொட்டி அதிமுகவின் 3வது அணியான தீபா பேரவை சார்பில் நேற்று மாலை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
3 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட கூட்டத்துக்கு, இரவு 7.30 மணிக்கு மேல் தீபா சென்றார். இதனால், அங்கு காத்திருந்த செய்தியாளர்கள், அவரை படப்பிடிக்க சென்றனர்.
இதை அவரது ஆதரவாளர்கள் தடுத்தனர். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஆனது. இதை பார்த்த பொதுமக்கள், அங்கு திரண்டனர். இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் தீபா மேடைக்கு சென்றபோது, நூற்றுக்கு மேற்பட்ட தொண்டர்களும், மேடைக்கு சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை மேடையில் இருந்து கீழே இறக்கினர்.
இதனால், தீபா ஆதரவாளர்களுக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், தள்ளுமுள்ளு நடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

பெரும்பாலும் கட்சி கூட்டம் நடத்தும்போது, போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அவர்களுக்கு உதவியாக கட்சி தொண்டர்கள் நடந்து கொள்வார்கள். ஆனால், நேற்று தீபா ஆலோசனை கூட்டத்தில் வெளி மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் பெயரில் குண்டர்களை வரவழைத்து இருந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.
