ஆந்திரா மாநிலத்தில் 25 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

 

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கடந்த மாதம் 30-ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக பதவியேற்றார். எனினும், அவருடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை

இந்நிலையில் இன்று 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. அமராவதியில் நடைபெற்ற விழாவில் 25 அமைச்சர்களுக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 3 பெண் அமைச்சர்கள் இட்பட 25 பேர் ஆந்திர தலைமை செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.

 

அம்ஜத் பாஷா மட்டும் பதவி ஏற்றுக் கொண்ட போது அல்லாஹ் மீது ஆணையாக உறுதி மொழி ஏற்றுக் கொண்டார். இதில் 60 சதவிகித அமைச்சர்களுக்கு சாதி ரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. 11 பேர் உயர்சாதி வகுப்பினர் ரெட்டி சமூகத்தை சார்ந்த அமைச்சர்கள் 4 பேர் - கப்பஸ் 4 கம்மா -4 வைஷ்யா 1 க்‌ஷ்ட்ரியா 1 ஆகிய சாதிகளுக்கு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதில் போஸ்ட சத்யநாராயணா, சுபாஷ் சந்திரபோஸ், விஸ்வருப், மொபிதேவி வெங்கட்ரமனா, ஸ்ரீனிவாச ரெட்டி, ராமச்சந்திர ரெட்டி ஆகியோர் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி காலத்திலேயே அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். இந்நிலையில் நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சர் பதவி அவருக்கு ஒதுக்கப்படவில்லை.

அவர் சபநாயகராகலாம் அல்லது துணை முதல்பதவி ஐந்தில் ஒன்று ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சித்தூர் தொகுதியை சேர்ந்த ராமச்சந்திர ரெட்டிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதால் அதே சமுதாயத்தை சேர்ந்த ரோஜா துணை முதல்வராவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.  அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் ரோஜா தனது செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.