அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவின் மகனை கைது செய்யுங்கள் என்று கூறி சென்னையைச் சேர்ந்த ரொபினா என்பவர் ஆளுநர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டர்.

ராமநாதபுரம் தொகுதி அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவின் மகன் நாசர். இவர் மீது சென்னையைச் சேர்ந்த ரொபினா என்ற பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசில் புகார் கூறியிருந்தார். அதில், நாசர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி குடும்பம் நடத்தவிட்டு ஏமாற்றி விட்டதாக அதில் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அடகு வைத்து கடன் கொடுத்திருப்பதாகவும் பிரபல்லா அந்த புகாரில் கூறியிருந்தார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நாசரிடம் கேட்டால், நாசரும் அவரது தந்தை அன்வர் ராஜாவும், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் ரொபினா அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் நாசர் அலிக்கு, காரைக்குடியில் பள்ளிவாசல் முன்பு போராட்டம் நடத்திய ரொபினா, அவரது திருமணத்தை நிறுத்துமாறு ஜமாத்திடம் வலியுறுத்தினார். இதன் பின்பு, காரைக்குடி போலீசில் நாசர் குறித்து புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் ரொபினா திடீரென கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து ரொபினா போலீசாரால் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். இதன் பின்று ரொபினா செய்தியளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தான் புகார் அளித்தும் நாசர் அலியை போலீசார் கைது செய்யவில்லை. நாளை முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் நாசர் நாளை மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் ரொபினா கூறினார்.

இதனைத் தொடர்ந்து ரொபினாவை போலீசார் கைது செய்து கிண்டி, மடுவங்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்திருந்ததாகவும் தற்போது அவர் விடுவிக்கப்பட்டதாகவும் ரொபினா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.