புதுச்சேரி பாஜக தேர்தல் பொறுப்பாளராக செயல்பட்டு வரும் எம்.பி., ராஜீவ் சந்திரசேகர், புதுச்சேரியில் தீவிர களப்பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பதிவில், 2011ல் கோடிட்டு காட்டிய பதிவை மேற்கோள் காட்டியுள்ளார். அதில், ஆதர்ஸ், காமென் வெல்த் ஊழல் ராஜாவில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சீனா- இந்தியா உடனான தொடர்பு, மத்திய உளவுத்துறை விவகாரம், தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர் 250 கோடி ரூபாயில் திருமணம் நடத்துகிறார். ஆஹா, இவ்வளவு பணம் சம்பாதித்தது எப்பாடி? அதனை வெட்கமில்லாமல் வெலியில் சொல்வது எப்படி என திறம்பட பதிலளிக்க வேண்டும் என அப்போதே கேள்வி எழுப்பி இருந்தார். 

அதனை மேற்கோள் காட்டி, ’’அறிவாலயம் அப்போதும் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தனர். ஆனால் அந்த பழியெல்லாம் காங்கிரஸ் மீதுவிழுந்தது. அப்படி இருந்தும் தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்க துடிப்பது எப்படி?’’எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார் ராஜீவ் சந்திரசேகர்.