எம்ஜிஆர் விசுவாசிகளின் ஒருவர் ஆர்எம்வீ என்று அழைக்கப்படும் இராம. வீரப்பன். 1977ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக விளங்கினார். எம்ஜிஆர் அமைச்சரவையில் முக்கியத்துவம் பெற்றிருந்தார். அரசியலில் தனக்கென பல சிஷ்யர்கள் உருவாக்கினார். இன்றைக்கு ஜெகத்ரட்சகன், திருநாவுக்கரசர், ஏ.சி. சண்முகம் ஆகியோர் இவரது சிஷ்யர்கள்.

பிரதமர் இந்திரா மறைந்ததும் 1984ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த நேரத்தில் முதல்வர் எம்ஜிஆர் அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். எம்ஜிஆர் சிகிச்சை பெறும் படங்களையே மக்களிடம் பிரச்சாரமாகக் கொண்டு சென்றார். ஆர்எம்வீ.  இவரது தேர்தல் வியூகத்தால் எம்ஜிஆர் இல்லாமலேயே அதிமுக அமோக வெற்றி பெற்றது.

எம்ஜிஆர் இருக்கும்போது ஆம்ஆர்வீக்கும், ஜெயலலிதாவுக்கும் ஏழாம் பொருத்தம். சென்னை மாநகர பேருந்துகளில் ஜெ. சிரீஸ் பேருந்துகளும், அதற்குப் போட்டியாக வி சிரீஸ் பேருந்துகளும் இயங்கின. அவை ஜெயலலிதா மற்றும் வீரப்பனை குறிப்பதாக உள்ளது என்றும் அப்போதே பரவலாக பேசப்பட்டு வந்தது. 1987ம் எம்ஜிஆர் மறைந்த பிறகு அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தது. ஜானகி அணியை ஆர்எம்வீ வழிநடத்தினார். 1989ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு இரண்டு அணிகளும் இணைந்தன. அதைத்தொடர்ந்து 1991ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான போது அமைச்சரவையில் ஆர்எம்வீ  சேர்த்துக்கொள்ளப்பட்டார். ஆர்எம் வீரப்பன் அரசியல்வாதியான எம்ஜிஆரின் தாயார் சத்யா மூவிஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி, எம்ஜிஆரை வைத்து பல படங்களை தயாரித்தார். 

எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ரஜினி, கமலை வைத்து படங்களை தயாரித்தார். ரஜினியை வைத்து அவர் எடுத்த பாட்ஷா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் வெற்றி விழாவில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ரஜினி பேச்சு சர்ச்சையானது. அதனால் ஜெயலலிதாவுக்கு  ஆர்எம்வீ  உடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அதிமுகவிலிருந்து பிரிந்து எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியை நடத்தி வந்தார். திடீரென்று கருணாநிதியின் அனுதாபியாக மாறினார்.

திமுகவுடன் நட்புடனே இருந்து வருகிறார். ஆனால், எந்த அறிக்கையும் விடுவதில்லை, அரசியல் கருத்தும் சொல்வதில்லை. சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே திருமலைப்பிள்ளை சாலையில் ஆர்எம்வீயின் வீடு உள்ளது. அவர் அமைச்சராக இருந்தபோது எப்போதுமே பரபரப்பாக இங்யகிய அந்த வீடு ஆள் இப்போது ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 9-ம் தேதி தனது 94வது வயது நிறைவு செய்திருக்கிறார். வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கிறார் என்ற நிகழ்ச்சி பங்கேற்பது இல்லை. ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தப்பிறகு ஆர்எம்வீ சந்தித்து ஆலோசனை நினைத்தாராம். அதற்கு ஆர்எம்வீ உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று மறுத்து விட்டதாக சொல்கிறார்கள். ரஜினி அரசியல் களத்திற்கு அடித்தளமிட்டவர் ஆர்எம்வீ என்று அன்றே பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.