rk nager election work

ஆர் கே நகர் இடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. அனைத்து கட்சி வேட்பாளர்களும் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்களை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் முன்னெச்சரிக்கைக்காக 10 கம்பெனி துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

ஆர்.கே நகர் பகுதி முழுவதும் மாநகர காவல்துறையினரும் துணை ராணுவ வீரர்களும் இணைந்து அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே செல்வதற்கு அனுமதிக்கின்றனர். 

மேலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவை தடுக்கவும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆர் கே நகரில் உள்ள குறுகிய சாலைகளில் ரோந்து பணி மேற்கொள்வதற்காக போலீசாருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு பேர் பயணம் செய்து 24 மணிநேரமும் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.