rk nagar election will be held within one year

ஆர்கே நகர் இடைத்தேர்தல் அடுத்த ஓராண்டிற்குள் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்கே நகர் இடைதேர்தல் நாளை (ஏப்ரல் 12 ) நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், பண பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது.

இதன் ஒரு பகுதியாக சந்தேகத்திற்குள்ளான தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார், எம் ஜி ஆர் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்ட மூவரின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

இதன் பின்னர் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தொடர்பாக பணப்பட்டுவாடா நடைப்பெற்றதை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆர்.கே நகர் இடை தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தேர்தலை ரத்து செய்ததற்கான காரணத்தை 29 பக்க அறிக்கையாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஆர். கே நகருக்கான இடைத்தேர்தல், ஓராண்டு காலத்திற்குள் ஆணையத்தின் நடத்தை விதிகளின் படி, நடத்தப் படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது