சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து எஸ்.கே.கிருஷ்ணன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சியின் போது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர்கள் க.பொன்முடி, எம்.எல்.ஏ., அந்தியூர் செல்வராஜ், எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி, எம்.பி., தலைமைக் கழக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் பி.வில்சன், எம்.பி., வழக்கறிஞர் விக்டர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனிடையே இவர் தற்போது இணைவது 4வது கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளில் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 5 ஆண்டுகளில் 4 கட்சிகளுக்கு இவர் மாறியது குறிப்பிடத்தக்கது. நீதித்துறையில் உயர் பொறுப்பில் உள்ள பலரும் அவர்களது பதவிக்காலத்துக்கு பிறகு அரசியல் கட்சிகளில் இணைவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.