Asianet News TamilAsianet News Tamil

அடிதூள்.. ஐ.ஐ.டி பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீடு தொடர்கிறது.. சமூக நீதியை உறுதி செய்த பாஜக..

"மத்தியக் கல்வி அமைச்சகம் அமைத்த ஆய்வுக் குழு அறிக்கை ஓர் நிச்சயமற்ற நிலையை, அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஐ.ஐ.டி மாணவர்கள் சிலர் கவலையோடு என்னிடம் பேசி வருகிறார்கள்.  

Reservation in IIT professor appointments continues .. BJP ensures social justice ..
Author
Chennai, First Published Mar 10, 2021, 12:24 PM IST

ஐ.ஐ.டி பேராசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டைக் கைவிடுமாறும், சில பதவிகளுக்கும் மட்டுமானதாக சுருக்குமாறும் மத்தியக் கல்வி அமைச்சகம் பரிந்துரைத்திருந்ததால் இட ஒதுக்கீடு தொடர்வது பற்றி அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இப் பின்னணியில் ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) "ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்படுகிறதா" என்று எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில் "இல்லை" என பதிலளித்துள்ளார்.  

இந்நிலையில்  சு. வெங்கடேசன் மாணவர் அனுமதிகளில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ். டி மாணவர் பிரதிநிதித்துவம் உரிய அளவுகளில் உறுதி செய்யப்படுவது, ஆசிரியர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டைக் கைவிடுகிற ஆய்வுக் குழுவின் அறிக்கையை அரசு நிராகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். 

Reservation in IIT professor appointments continues .. BJP ensures social justice ..

மேலும் இது குறித்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், "மத்தியக் கல்வி அமைச்சகம் அமைத்த ஆய்வுக் குழு அறிக்கை ஓர் நிச்சயமற்ற நிலையை, அச்சத்தை உருவாக்கியுள்ளது. ஐ.ஐ.டி மாணவர்கள் சிலர் கவலையோடு என்னிடம் பேசி வருகிறார்கள். ஆய்வு அறிக்கை பரிசீலனையில் இருக்கிறது என்ற பெயரால் பேராசிரியர் நியமனங்களே மேற்கொள்ளப்படாமல் இழுத்தடிக்கப்படுமோ என்ற அச்சம் உள்ளது. 

Reservation in IIT professor appointments continues .. BJP ensures social justice ..

பி.எச்.டி அனுமதிகளிலும் இட ஒதுக்கீட்டை அமலாக்குவது கட்டாயமானதாக இருக்க வேண்டியதில்லை என அந்த ஆய்வறிக்கை கூறியிருப்பதும் அவர்களின் கவலைக்கு காரணம்.  ஆனால் தற்போது அமைச்சர் இட ஒதுக்கீடு தொடர்கிறது என்று பதில் அளித்துள்ளார். எனவே, பதில் மட்டும் போதாது. ஆய்வறிக்கையை உடனடியாக நிராகரித்து சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும். உடனே பேராசிரியர் பணி நியமனங்களை மேற்கொண்டு உரிய பிரதிநிதித்துவத்தை ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்க்கு உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios