Republican leader Ramnath Govind said that good governance is a signal.
சாமானியர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசு தான், நல்ல அரசுக்கு அடையாளம் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.
அப்போது, சாமானியர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் அரசு தான், நல்ல அரசுக்கு அடையாளம் என தெரிவித்தார்.
கள்ளச் சந்தையில் நடைபெறும் யூரியா விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறுதானிய பயிர்காப்பீட்டு திட்டத்தின் மூலம் 5 கோடி விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர் குறிப்பிட்டனர்.
மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு 4 கோடி மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன எனவும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை எதிர்பார்த்ததை விட பல மடங்கு உயர்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.
11 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் துரிதமாக தயாராகி வருவதாகவும் ஆயிரக்கணக்கான வங்கிகளுக்கு அதிக நிதி ஒதுக்கி சாமானியர்கள் கடன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இஸ்ரோவின் விண்வெளி சாதணைகளால் இந்தியாவின் மதிப்பு சர்வதேச அளவில் உயருகிறது எனவும் புகழாரம் சூட்டினார்.
