Remembering Shivaji pride is the pride of the people of Tamil Nadu
அரசியலில் இரு துருவமாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழ்ந்தவர்கள் என்று மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்
சென்னை, அடையாறில் நடிகர் திலகத்தின் மணிமண்டபத்தை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்து வைத்தார்.
அப்போது பேசிய ஓ.பி.எஸ்., இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளாலும் பாராட்டப்பட்டவர் நடிகர் சிவாஜி கணேசன் என்று கூறினார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரில் விருதை அறிவித்தவர் ஜெயலலிதா என்றும் அவர் தெரிவித்தார். தாயை நேசிப்பவர்கள் மிகச் சிறந்த உயரத்துக்கு வந்ததில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் உதாரணம். அரசியலில் இரு துருவமாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழ்ந்தவர்கள் என்று கூறினார்.
உலக தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் சிவாஜி கணேசன். அவரின் பெருமைகளை நினைவு கூறுவது தமிழக மக்களுக்கே பெருமை என்றார்.
முன்னதாக ஓ.பி.எஸ். தனது உரையை துவக்கும்போது, அனைவரையும் வரவேற்றார். அப்போது, சிறந்த நகைச்சுவை நடிகர் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களே என ஓ.பி.எஸ். கிண்டலடித்தார்.
