Asianet News TamilAsianet News Tamil

கொரோனா காலத்தில் உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு நிவாரணம்.. அமைச்சர் மா.சு அதிரடி அறிவிப்பு.

கொரோனா காலத்தில் உயிரிழந்த சுகாதார துறையினரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், விரைவில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Relief for health workers who lost their lives during the Corona period. Minister Ma.Su Announced.
Author
Chennai, First Published Oct 12, 2021, 11:42 AM IST

கொரோனா காலத்தில் உயிரிழந்த சுகாதார துறையினரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், விரைவில் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதேபோல் களப் பணியாளர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும், அவர்களுக்கும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா காலத்தில்  அரசின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

Relief for health workers who lost their lives during the Corona period. Minister Ma.Su Announced.

இதையும் படியுங்கள்: ஊரக உள்ளாட்சி தேர்தல்: ஆரம்பம் முதலே தட்டித்தூக்கிய திமுக.. பின்தங்கிய அதிமுக, காணாமல் போன பாமக..

இந்த வரிசையில் தமிழகம் முழுவதும் வரும் முன் காப்போம் என்ற பெயரில் 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் இன்று நடத்தப்பட்டது, சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கண்ணகி நகர் பகுதியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் முன் காப்போம் என்ற திட்டம் முன்னாள் முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அத்திட்டம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டில் 1000 இடங்களில் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 50 இடங்களில் அந்த முகாம்கள் நடைபெறுகிறது, காலை 9 மணிக்கு துவங்கும் இந்த முகாம்கள் பிற்பகல் 4 மணிவரை நடைபெறவுள்ளது என்றார். 

Relief for health workers who lost their lives during the Corona period. Minister Ma.Su Announced.

இதையும் படியுங்கள்:  பெஞ்ச் தேய்த்து, ஹாயாக சம்பளம் வாங்கிய அதிகாரிகள்.. கண்டறிந்து ஆப்பு அடித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.

பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, சிறுநீரகவியல், எலும்பு, மூட்டு, இதய நோய், கண் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளது என்றார். இந்த முகாம்களில் 20 வகையான உடல் சோதனைகளும் நடத்தப்பட்ட உள்ளது, தற்போது 331 நபர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். டெங்கு பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். அதேபோல் கொரோனா காலத்தில் களத்தில் பணியாற்றி உயிரிழந்த சுகாதார துறையினரது பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும் விரைவில் அவளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றார். அதேபோல் சுகாதார களப்பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்களுக்கும் நிவாரணம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios