பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பாண்டியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அனுராதா தினகரன்.

சென்னை அடையாற்றில் டிடிவி தினகரன் வீடு அமைந்துள்ளது. இன்று மதியம் இவரது வீட்டு அருகே நின்றிருந்த இன்னோவா கார் ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இதில் கார் கண்ணாடிகள் தூள் தூளாகின. இதில் கார் டிரைவர் பாண்டிதுரை, புகைப்படக்காரர்  மற்றும் அந்த ஏரியாவில் சென்று கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் என மொத்தம் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இதனையடுத்து, கார்டிரைவரை உடனடியாக சிகிச்சைக்காக அபல்லோ மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன்பாக, அனுராதா பெட்ரோல் குண்டு வீச்சில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பாண்டியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் தினகரனின் மகளும் ஆறுதல் கூறினார்.