Asianet News Tamil

தப்லீக் ஜமாத் முஸ்லீம்களை விடுதலை செய்! திடீரென களம் இறங்கிய திமுக! பரபரப்பு பின்னணி!

தமிழகத்திற்கு சுற்றுலா விசாவில் வந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தப்லீக் ஜமாத் முஸ்லீம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. இதன் பரபரப்பு பின்னணி குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

Release the Tablighi Jamaat Muslims Why DMK Suddenly Raising this matter
Author
Chennai, First Published Jul 10, 2020, 11:18 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் திரு. டி.ஆர்.பாலு . வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழகத்திற்கு 9 நாடுகளிலிருந்து வந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 நபர்கள் பதினைந்து வெவ்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அதிமுக அரசு கைது செய்து- அவர்களை எல்லாம் மத்திய அரசு வகுத்துள்ள “தடுப்பு மற்றும் சிறப்பு முகாம்கள்” விதிகளுக்கு மாறான இடங்களில்- சுகாதார வசதி, உணவு வசதி உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நெருக்கடி மிகுந்த சிறார் இல்லங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

ஏற்கனவே பலருக்குப் பிணை வழங்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு கடந்த ஜூன் 12 அன்று மேலும் 4 பெண்கள் உட்பட 31 வெளிநாட்டு இஸ்லாமியர்களுக்கு பிணை வழங்கியது. அந்த உத்தரவில், “அவர்களைப் புழல் சிறையில் உள்ள சிறப்பு முகாமில் வைப்பது சரியில்ல. சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரபிக் கல்லூரியிலோ அல்லது வேறு நல்ல இடத்திலோ அவர்களைத் தங்க வைப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். அவர்கள் கொரோனா பரப்பியதற்கான ஆதாரம் இல்லை.

விசா விதிமுறை மீறலுக்காக போதுமான அளவு தண்டனையை அனுபவித்து விட்டார்கள். ஆகவே இதனை ஒப்புக்கொண்டு அவர்கள் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் அவர்களின் வழக்கை முடித்து தங்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பி வைப்பதற்குத் தமிழக அரசு உதவிட வேண்டும்” என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பிணைக்கான நிபந்தனைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நிறைவேற்றிய பிறகும், மேற்கண்ட 31 வெளிநாட்டு இஸ்லாமியர்களையும் கொரோனா பரவும் புழல் சிறையில் அடைத்து வைத்திருப்பதும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கூட இல்லாத அளவிற்கு இவர்களை அதிமுக அரசு துன்புறுத்தி வருவதும் சட்ட விரோதமானது. மத்திய அரசே இதுகுறித்து வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிரானது.

ஆகவே உயர்நீதிமன்றத்தால் பிணை அளிக்கப்பட்டு- புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 129 வெளிநாட்டு இஸ்லாமியர்களை உடனடியாக விடுவித்து- அவர்களைச் சுகாதார வசதிகள் கொண்ட சிறுபான்மை கல்வி நிறுவனத்தின் விடுதிக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அவர்கள் மீதான வழக்குகளை முடித்து வைப்பது குறித்தும்- அவர்களைச் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மத்திய- மாநில அரசுகள் தாமதமின்றிப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அந்த அறிக்கையில் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். திமுக கூறியுள்ள இந்த 129 முஸ்லீம்களும் தங்கள் நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வருவதாக விசா பெற்று வந்தவர்கள். ஆனால் இங்கு வந்த பிறகு டெல்லி சென்று தப்லீக் ஜமாத் மாநாட்டிற்கு சென்று வந்தனர். இவர்களில் சிலர் மூலமாகவே முதலில் ஈரோடு மற்றும் சேலத்தில் கொரோனா பரவியது. இதனை அடுத்து சுற்றுலா விசாவில் வந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வலியுறுத்தப்பட்டது.

இதனை ஏற்று வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் தாங்களாக முன்வந்தனர். ஆனால் சிலர் முன்வரவில்லை. அவர்கள் பதுங்கியிருந்த இடங்களுக்கு நேரடியாக சென்று போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்களில் சிலருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாக திமுக கூறுகிறது. ஜாமீன் வழங்கப்பட்டும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்று திமுக சொல்கிறது. ஜாமீன் வழங்கியும் இவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் உடனடியாக அவர்கள் சார்ந்த நாடுகளி தூதரகங்களை திமுக நாடலாம். ஜாமீன் கொடுக்கப்பட்ட நிலையிலும் வெளிநாடுகளை சேர்ந்தவவர்களை சிறையில் வைத்திருப்பது சட்டவிரோதசம்.

சர்வதேச அளவில் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியது. இந்த விவகாரத்தில் திமுக தொடர்புடையவர்களின் நாடுகளின் தூதரங்களை அணுகாமல் அறிக்கை விடுவதில் தான் அரசியல் உள்ளதாக கூறுகிறார்கள் அதிமுகவினர். தப்லீக் மாநாட்டுக்கு சென்று வந்த வெளிநாட்டினர் ஜாமீன் பெற்றாலும் கூட அவர்களுக்கான நிபந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் வெளிநாடுகளுக்கு தற்போது வரை விமானங்கள் இயக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் ஜாமீனில் வெளியேவிட்டார் அவர்களை எப்படி நாடு கடத்துவது? மேலும் போலி விஷாவில் மதப்பிரச்சாரம் செய்த வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் மீண்டும் இந்தியா வர 10 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “நான் ஏதாவது பண்ணிக்கிட்டால்”.... நெட்டிசன்களுக்கு வனிதா விடுத்த அதிரடி எச்சரிக்கை...!.

இது போன்ற காரணங்களால் தான் தொடர்ந்து அவர்கள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவற்றை மறைத்து திமுக இ ந்த விவகாரத்தில் தலையிடுவது முழுக்க முழுக்க சிறுபான்மையினர் வாக்கு வங்கியை குறி வைத்து தான் என்கிறார்கள். தப்லீக் முஸ்லீம்களுக்கு ஆதரவாக அறிக்கை விடுவதன் மூலம் அவர்களின் வாக்குகளை கவர்ந்துவிடலாம் என்பது தான் திமுகவின் திட்டம்எ ன்று விமர்சிக்கின்றனர் அதிமுகவினர். அதே சமயம் இந்த விவகாரத்தில்  முஸ்லீம்களுக்காக கட்சி நடத்தும் ஒருவர் திமுக தலைவரிடம் பேசி இந்த அறிக்கையை வெளியிட வைத்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

அந்த முஸ்லீம் தலைவர் ஆரம்பம் முதலே தப்லீக் ஜமாத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வருகிறார். இதன் பின்னணியில் வெளிநாடுகளில் இருந்து அவருக்கு அந்த அமைப்பு மூலம் வரும் நிதியே காரணம் என்று கூறுகிறார்கள். அந்த நிதி தங்கு தடையின்றி வர வேண்டும் என்றால் தற்போது சிறையில் இருக்கும் அந்த அமைப்பிரை மீண்டும் அவர்கள் நாட்டிற்கே அனுப்பி வைக்க வேண்டும் என்பதால் தான் இந்த விஷயத்தில் அந்த முஸ்லீம் தலைவர் அதீத ஆர்வம் காட்டுவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. அந்த தலைவர் தற்போது திமுக கூட்டணியில் இருப்பதால் திமுக அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளதாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios