AIADMK Candidates: அதிமுக வேட்பாளர்கள் யார்?போட்டியிட உள்ள இடங்கள் எத்தனை? பட்டியலை வெளியிட்ட எடப்பாடி!!
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
அதன் படி, சென்னை வடக்கு ராயபுரம் மனோ, சென்னை தெற்கு ஜெயவர்த்தன், காஞ்சிபுரம் தனித்தொகுதி ராஜசேகர், அரக்கோணம் ஏ எல் விஜயன், கிருஷ்ணகிரி ஜெயபிரகாஷ், ஆரணி கஜேந்திரன், விழுப்புரம் தனித்தொகுதி பாக்கியராஜ், சேலம் விக்னேஷ்,நாமக்கல் தமிழ்மணி, ஈரோடு ஆற்றல் அசோக்குமார், கரூர் தங்கவேல், சிதம்பரம் தனித்தொகுதி சந்திரகாசன், நாகப்பட்டினம் தனி சங்கர், மதுரை டாக்டர் சரவணன், தேனி நாராயணசாமி, ராமநாதபுரம் ஜெயா பெருமாள் ஆகிய 16 பேரின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி என்ன.?
அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 5 தொகுதிகளும், புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். விரைவில் அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளதாகவும் கூறினார். மேலும் கூட்டணி இல்லாமல் ஏற்கனவே அதிமுக பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார். எனவே கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் இல்லையென்றால் தேர்தலை எதிர்கொள்வோம் என தெரிவித்தார்.