Rejecting titivitinakaranai arkenakar people - beginning with the shocking campaign of Ministers in Tallinn feet
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சசிகலா தரப்பு வேட்பாளர் டி.டி.வி தினகரன் களமிறங்கியுள்ளார். ஆர்.கே.நகர் மக்களிடம் ஆரம்பமே செம பல்பு வாங்கியதால் அமைச்சர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துபோய் உள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று சசிகலா தரப்பு வேட்பாளர் தினகரன், ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவர் தீபா உள்ளிட்ட 72 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
மொத்தம் இதுவரை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட 127 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வேட்பு மனுதாக்கல் செய்த தினகரன் மற்றும் மதுசூதனன் இன்று மாலையே அனல் பறக்கும் பிரச்சாரத்தை துவங்கினர்.
இதில் மதுசூதனுக்கு ஆர்.கே.நகரில் பலமான வரவேற்ப்பு கிட்டியது. ஆர்.கே.நகர் மக்கள் மதுசூதனனை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் பிரச்சாரத்தில் தீப்பொறியாய் இறங்கிய தினகரன் ஆரம்பமே காற்று போன பலூன் போல ஆகிவிட்டார்.
அதற்கு காரணம் ஆர்.கே.நகர் மக்கள் அவருக்கு அளித்த மரியாதைதான்.
சென்னை நகரம் மற்றும் வெளியூர்களிலிருந்து வரவழைக்கப்பட்ட ஆட்களை தவிர ஆர்.கே.நகர் வாசிகள் எவரும் தினகரனை காணவோ வரவேற்கவோ ஆர்வம் காட்டவில்லை.
இதையடுத்து டல் ஆன டி.டி.வி காரை விட்டு இறங்கினால் உற்சாகம் வரும், பொதுமக்கள் வரவேற்பார்கள் என எதிர்பார்த்து சிறிது நேரம் வேனில் வந்தவர் இறங்கி நடக்க துவங்கினார்.
அதற்கும் பொதுமக்கள் சீண்ட கூட இல்லையாம். தினகரன் வணக்கம் வைத்தும் பதிலுக்கு யாரும் வணக்கம் கூட வைக்கவில்லை.
இதைவைத்தே மக்கள் இன்னும் கோபத்தில் தான் உள்ளார்கள் என புரிந்து கொண்டனராம் சசிகலா தரப்பு அமைச்சர்கள்.
இவருக்கு தான் இந்த நிலைமை என்றால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைமை இன்னும் மோசம்.
முதலமைச்சர் ஆனதிலிருந்து அவரும் பல நலத்திட்ட உதவிகள் குறித்து பேசியும் செயல்படுத்தியும் வருகிறார். ஆனால் அவற்றையெல்லாம் மக்கள் வாங்கி கொண்டாலும் எடப்படிக்கு என்னமோ மதிப்பு தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எடப்பாடி முதலமைச்சராக பதவி ஏற்றத்தில் இருந்து பெரும்பாலும் சசிகலாவின் பெயரை உச்சரிப்பதில்லை. இருந்தாலும் கர்ணன் துரியோதனனுடன் இருந்தது போல எடப்பாடி டி.டி.வியுடன் இருப்பது மக்களுக்கு பிடிக்கவில்லையோ என்னமோ.
பல தேர்தல் பிரச்சாரங்களை பார்த்த அமைச்சர்கள் முதல் நாளிலேயே மக்களின் பல்ஸ்சை புரிந்து கொண்டனர்.
கண்டிப்பாக இந்த இடைத்தேதலில் டி.டி.வி மண்ணை கவ்வ போகிறார் என்ற அமைச்சர்களின் மைன்ட் வாய்ஸ் ஆர்.கே.நகர் தொகுதிக்கே கேட்கிறதாம் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
