பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்திற்கு விவசாயிகள் தங்களது ஆதார் எண், தொலைபேசி என் உள்ளிட்ட சுயவிவரத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் அதற்கான கால அவகாசம் ஜூலை 31 ஆம் தேதிவுடன் முடிவடைகிறது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்திற்கு விவசாயிகள் தங்களது ஆதார் எண், தொலைபேசி என் உள்ளிட்ட சுயவிவரத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் அதற்கான கால அவகாசம் ஜூலை 31 ஆம் தேதிவுடன் முடிவடைகிறது என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அப்படி பதிவு செய்ய தவறும் பட்சத்தில் மத்திய அரசின் 2 ஆயிரம் ரூபாய் தொகை கிடைக்காமல் போகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம்:

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது அதில் பெரும்பாலான திட்டங்களை மக்கள் வரவேற்று பயண்டைந்து வருகின்றனர். அதில் ஒன்று தான் "பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டம்" நாட்டில் விவசாயிகளின் நலனுக்காக இத்திட்டத்தை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக 6 ஆயிரம் ரூபாய் இத்திட்டத்தின் மூலம் செலுத்தப்படுவதை இத்த திட்டதின் சிறப்பம்சம். 

இதையும் படியுங்கள்: கலவரத்துக்குள்ளான பள்ளியில் தொடரும் மரணங்கள்..? அன்றே ஆர்பாட்டம் நடத்திய கம்யூனிஸ்ட்.. வைரலாகும் நோட்டீஸ்

இந்த 6 ஆயிரம் ரூபாய் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் என சம அளவில் பங்கிட்டு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் வகையில் இத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிதியைபெற விவசாயிகள் தங்களது விவரங்களை கிஷான் யோஜனா இணைய பக்கத்தில் பதிவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ.2000 தவறவிடாதீர்கள்:

(pm Kisan Samman Nidhi) pm kishan இத்திட்டம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள் பயன் பெறுவதற்காக செயல்படுத்தப்படும் திட்டமாகும் இத்திட்டத்தின்கீழ் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தகுதியான விவசாயிகளுக்கு 2000 ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது, எனவே அவர்கள் தங்கள் விவரங்களை இணையதளத்தில் பதி விடாவிட்டால் 2000 கிடைப்பதில் சிக்கல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: கலவரத்தால் கிடைத்த நீதி என்ன..? உண்மை எதுவென்று தெரியாமல் எதற்கு போராட்டம்..? நீதிபதி கேள்வி

உடனே செய்ய வேண்டியது என்ன:

PM கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள விவசாயிகள் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் KYC தங்களது ஆதார் எண், தொலை பேசி எண், வங்கி விவரம் உள்ளிட்ட தகவல்களை பதிவிட வேண்டும், போலியானவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவதை தடுக்கும் வகையிலும், அதேபோல் மோசடிகளை தடுப்பதற்காகவும் இந்த தகவலை விவசாயிகள் பதிவிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் தகவல்களை பதிவு செய்யும் விவசாயிகள் அடுத்த தவணையில் 2000 ரூபாய் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் KYC பதிவு செய்வது எப்படி:

e - KYC பதிவு செய்ய அதிகாரபூர்வ வலை தளமான https://pmkisan.gov.in/ என்ற முகவரியில் சென்று e-KYC-யில் கிளிக் செய்து, அதில் ஆதார் எண் மற்றும் பட குறியீடு போன்றவற்றை பதிவு செய்து, பின்னர் தொலைபேசி எண் மற்றும் OTP பதிவு செய்ய வேண்டும். இப்படி செய்யும்பட்சத்தில் உங்களது தகவல்கள் அதில் பதிவேற்றமாகும், ஒருவேளை இது தங்களால் செய்ய முடிவு இல்லை என்றலோ அல்லது பதிவானதை உறுதி செய்ய ஆதார் சேவை மையத்திற்கு சென்று சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.