பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளிக்யைில்  நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் நோய் தடுப்பு பணிக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன் இதுவரை 4 முறை ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.  சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தடுப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னையில் 4,000 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகமான மக்கள் நிறைந்த நகரம் சென்னை என்பதால் நோய்த்தொற்று அதிகரித்துள்ளது. பொதுக் கழிப்பிடங்களை அதிகமாக பயன்படுத்துவதாலும் தொற்று ஏற்படுகிறது. கபசுர குடிநீரும், நிலவேம்பு கசாயமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 

கட்டுப்பாட்டு அறைக்கு சென்னை மாநகர மக்கள் தொடர்புகொள்ளலாம். கட்டுப்பாட்டு அறையில் உள்ள மருத்துவர்கள் கொரோனா பற்றி உரிய ஆலோசனைகள் வழங்குவார்கள். தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 3 வேளையும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. நடமாடும் பரிசோதனை வாகனம் மக்கள் இருக்கும் பகுதிகளுக்கே நேரடியாக செல்கிறது. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் அதிக பரிசோதனை மையங்கள் இருக்கின்றன. அரசின் சரியான நடவடிக்கைகள் மூலம் கொரோனா தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கண்ணின் இமை காப்பது போல் மக்களை காத்து வருகிறது தமிழக அரசு. வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம் மூலமாக நாள் ஒன்றுக்கு 7 லட்சம் பேருக்கு உணவளித்து வருகிறோம்.

தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 3 வேளையும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. நடமாடும் பரிசோதனை வாகனம் மக்கள் இருக்கும் பகுதிகளுக்கே நேரடியாக செல்கிறது. பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனாவை தடுக்க அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று முதல்வர் இருகரம் கூப்பிட்டு வேண்டி விரும்பி கேட்டுக்கெண்டுள்ளார்.