இந்தியாவிலேயே தமிழகத்தில் அதிகபட்சமாக பெட்ரோல் -டீசல் வரியை குறையுங்கள்.. ஸ்டாலினுக்கு விஜயகாந்த் நெருக்கடி.!

புதுச்சேரி மாநிலம் பெட்ரோல் விலையை  ரூ. 12.85 வரை குறைத்துள்ளது.  ஆனால் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவில்லை.  ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. 

Reduce maximum petrol-diesel tax in Tamil Nadu... Vijayakanth

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் மீதான வரியை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும்  என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வை அடுத்து பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கிடுகிடுவென உயர்த்தி வந்தனர். இதனால் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாயை நாடு முழுவதும் கடந்தது, டீசலும் லிட்டர் 100 ரூபாய்க்கும் மேல் பல மாநிலங்களில் உயர்ந்தது. இதனால் நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் பெரிதும் சொல்லமுடியாத துயரத்திற்கு ஆளாகினர். இதையடுத்து, பெட்ரோல் மீதான உற்பத்தி வரிசை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 10 ரூபாயும் மத்திய அரசு அதிரடியாக குறைந்து.  தீபாவளி திருநாளில் அமலுக்கு வந்தது.

Reduce maximum petrol-diesel tax in Tamil Nadu... Vijayakanth

பெட்ரோல், டீசல் விலையை மேலும் குறைக்க மாநில அரசுகள் விற்பனை வரி, வாட் வரியைக் குறைக்க முன்வர வேண்டும் என்றும் மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து, தமிழகம் தவிர மற்ற 24 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் ஓபிஎஸ், ராமதாஸ், விஜயகாந்த் ஆகிய தலைவர்கள் வலியுறுத்தியுள்ள வருகின்றனர். 

Reduce maximum petrol-diesel tax in Tamil Nadu... Vijayakanth

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல் டீசல் விலை உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.  ஏற்கனவே கொரோனா ஊரடங்கில் இருந்து மீண்டு தற்போதுதான் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில், பெட்ரோல் டீசல் மற்றும் விலைவாசி உயர்வு மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. 

Reduce maximum petrol-diesel tax in Tamil Nadu... Vijayakanth

அண்மையில் பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. மேலும் மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க 24 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல் விலை அதிகபட்சமாக ரூ.13.35 வரை குறைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் பெட்ரோல் விலையை  ரூ. 12.85 வரை குறைத்துள்ளது.  ஆனால் தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவில்லை.  ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே குறைத்தது. டீசல் மீதான வரியை குறைக்கவே இல்லை.  எனவே மற்ற மாநிலங்களை விட  அதிகபட்சமாக தமிழகத்தில் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும்.  

Reduce maximum petrol-diesel tax in Tamil Nadu... Vijayakanth

பெட்ரோல் டீசல் விலையை மேலும் உயர்த்தாமல், நிரந்தரமாக விலை குறைப்பை அமல்படுத்த வேண்டும். இதன்மூலம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும்.  எனவே தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பெட்ரோல் டீசல் மீதான வரியை தமிழக அரசு உடனடியாக குறைக்க வேண்டும்  என தே.மு.தி.க சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios