Asianet News TamilAsianet News Tamil

காஷ்மீர் பிரச்சனையில் மீண்டும் மூக்கை நுழைக்கும் டிரம்ப் !! பிரச்சனையில் தலையிட தயாராக இருக்கிறாராம் !!

மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒர முறை இப்படி கூறி அவரது பேச்சுக்கு இந்தியா கொந்திளிதிருந்த நிலையில் அவர் மீண்டும் அப்படி பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ready to solve the problem between india -pakistan
Author
Washington D.C., First Published Aug 2, 2019, 8:47 AM IST

காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துக்கொள்வது இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச்சார்ந்தது எனவும், இரு நாடுகளும் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், காஷ்மீர் பிரச்சினையில் உதவ தயராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.  

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அண்மையில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இம்ரான் கானுடனான சந்திப்புக்கு பிறகு  “பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டார் என்று டிரம்ப் கூறினார். 

ready to solve the problem between india -pakistan

டிரம்பின் கருத்து இந்தியாவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் டிரம்பின் கருத்தை திட்டவட்டமாக மறுத்தது. 

இந்த நிலையில், வாஷிங்டன்னில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்பிடம்,  காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும் முடிவை இந்தியா ஏற்க மறுத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தை ஏற்றுக்கொள்வது என்பது மோடியிடம் தான் உள்ளது. 

ready to solve the problem between india -pakistan

மோடியும் இம்ரான் கானும் மிகச்சிறந்தவர்கள். காஷ்மீர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று இருநாடுகளும் விரும்பினால் உதவ தயாராக இருக்கிறேன். காஷ்மீர் பிரச்சினை இந்தியா- பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக உள்ளது என டிரம்பி தெரிவித்தார்.

ஏற்கனவே டிரம்பின் பேச்சு இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios