Asianet News TamilAsianet News Tamil

ராமதாசுடன் உறவு பாராட்ட தயக்கமில்லை.. ஆனால் தேர்தல் உறவு எப்போதும் கிடையாது.. திருமாவளவன் திட்டவட்டம்.

எஸ்சி,எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சமூகங்களை பிளவு பட்டுக்துகிற மறைமுக  செயல் திட்டத்தோடு பாஜக-சங்பரிவார் அமைப்புகள் செயல்படுகின்றன என குற்றம் சாட்டினார்.

 

Ready to appreciate the relationship with Ramadas .. but not always the electoral relationship .. Thirumavalavan Tittavattam.
Author
Chennai, First Published Aug 17, 2021, 1:11 PM IST

உலகின் எந்த மூலையிலும் மத அடிப்படைவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடக்கூடாது என ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக தலைவர் தொல். திருமாவளவனின் 59வது பிறந்த நாள் அவரது கட்சி நிர்வாகிகளாலும் தொண்டர்களாலும் இன்று  கொண்டாடப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அம்பேத்கருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து திருமாவளவனை வரவேற்றனர் அதன் தொடர்ச்சியாக கேக் வெட்டி தனது பிறந்த நாளை திருமாவளவன் கொண்டாடினார். 

Ready to appreciate the relationship with Ramadas .. but not always the electoral relationship .. Thirumavalavan Tittavattam.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன்; கொள்கைக் குன்றாக நின்று ஒரு திராவிட சிறுத்தையாக பணியாற்றி கொண்டிருக்கிறார் திருமாவளவன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தம்மை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதாகவும், அவருக்கு தம் நெஞ்சார்ந்த நன்றி எனக் கூறினார். அதேபோல், நல்லக்கண்ணு, முத்தரசன், வீரமணி உள்ளிட்ட தலைவர்களும்  மற்றும் ராஜாக்கண்ணப்ப்பன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்களும் தமக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர்களுக்கும் நன்றி என தெரிவித்தார். ஆகஸ்ட் 17ம் தேதி முதல் செப்டம்பர் 17ம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு சமூகநீதி சமூகங்களுக்கான ஒற்றுமை என்னும் முழக்கத்தை கோட்பாடாகக் கொண்டு கருத்தியல் பிரச்சாரம் பரப்பப்படும் என திருமாவளவன் கூறினார். 

Ready to appreciate the relationship with Ramadas .. but not always the electoral relationship .. Thirumavalavan Tittavattam.

எஸ்சி,எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சமூகங்களை பிளவு பட்டுக்துகிற மறைமுக  செயல் திட்டத்தோடு பாஜக-சங்பரிவார் அமைப்புகள் செயல்படுகின்றன என குற்றம் சாட்டினார். இட ஒதுக்கீட்டை அழித்தொழிக்க வேண்டும் சமூக நீதியை அழித்தொழிக்க வேண்டும் என்பது அவர்களின் மறைமுக செயல் திட்டங்களில் ஒன்று  ஆகவே எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்து அதை தடுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தவே  இந்த பரப்புரையை மேற்கொள்ள இருக்கிறோம் என கூறினார். குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக திமுக அறிவித்த தேர்தல் அறிக்கை குறித்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்வி குறித்து கேட்கப்பட்ட போது, 

Ready to appreciate the relationship with Ramadas .. but not always the electoral relationship .. Thirumavalavan Tittavattam.

எதிர்க்கட்சி என்றால் ஆளுங்கட்சியை விமர்சிப்பது என்பது வழக்கமான ஒன்று, அது வரலாற்றுத் தேவை அந்த வகையில் அதிமுக திமுகவை விமர்சித்து இருக்கிறது. என்றாலும் கூட அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் வைத்துள்ளார் என நான் புரிந்து கொள்கிறேன். தமிழக முதலமைச்சர் அதைப் பரிசீலிப்பார் என திருமாவளவன் பதிலளித்தார்.தமக்கும் திருமாவளவனுக்கு எந்த பிரச்சினையுமில்லை அவருடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருப்பதாக ராமதாஸ் தெரிவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, எல்லோரோடும் இணக்கமாக இருக்க வேண்டும் நட்புணர்வோடு பயணிக்க வேண்டும் என்பதுதான் விடுதலை சிறுத்தைகளின் நோக்கம். 

Ready to appreciate the relationship with Ramadas .. but not always the electoral relationship .. Thirumavalavan Tittavattam.

ராமதாஸ் உளப்பூர்வமான சமூக ஒற்றுமையை விரும்பினால் அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், ராமதாசுடன் தேர்தல் உறவு  எப்போதும் இருக்காது சமூக உறவை எப்போதும் தவிர்க்க மாட்டோம் என திருமாவளவன் உறுதிபட கூறினார். ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குஉலகின் எந்த மூலையிலும் மத அடிப்படைவாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விடக்கூடாது வலிமை பெற்று விடக்கூடாது. ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுக் கொண்டிருப்பது ஒரு ஆட்சிமாற்றம் என அரசியல் ரீதியாக நாம் பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தானில் நடப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரிக்கவில்லை என திருமாவளவன் கூறினார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios