Asianet News TamilAsianet News Tamil

உதயநிதியை அமைச்சர்கள் புகழ்ந்தார்கள்.. இப்போ ஸ்டாலின் புகழ்கிறார்.. இது எங்கே சென்று முடியுமோ-ஆர்.பி.உதயகுமார்

  தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் தமிழக மாணவர்கள் பங்கேற்காத அவல நிலைதான் நீடிக்கிறது. ஆனால்  உதயநிதியை அமைச்சர் புகழ்ந்தார்கள். தற்போது முதலமைச்சரே புகழ்கிறார் என ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

RB Udayakumar has said that no progress has been made in the field of sports since Udayanidhi took charge
Author
First Published Jul 26, 2023, 10:49 AM IST

அதிமுக மாநில மாநாடு

அதிமுக மாநில மாநாடு  ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநில மாநாட்டிற்கு பொதுமக்களை பங்கேற்க செய்யும் வகையில், மரக்கன்றுகளை வழக்கு நிகழ்ச்சி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், எடப்பாடியார் தலைமையில் வீர வரலாற்றில் பொன்விழா மாநாடு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறுகிறது.  

இந்த மாநாட்டில் பொது மக்களை பங்கேற்கும் செய்யும் வகையில், கழக அம்மா பேரவையின் சார்பில் மதுரை பட்டினத்தை, பசுமை பட்டினம் ஆகும் வகையில் மரக்கன்று கொடுத்து அழைக்கப்பட்டு வருகிறது. இதே மதுரையில் தான் முதன் முதலாக எடப்பாடியார் முதலமைச்சராக பொறுப்பேற்று, முதல் அரசு விழாவாக தமிழ் சங்கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் எடப்பாடியார் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். 

RB Udayakumar has said that no progress has been made in the field of sports since Udayanidhi took charge

புலியை பார்த்து, பூனை சூடு போட்டது

புரட்சித்தலைவர் நூற்றாண்டு விழாவை எடப்பாடியார் நடத்தி பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள், கட்டிடங்கள் என நூற்றாண்டு விழா நினைவாக உருவாகி கொடுத்தார். அதனைப் பார்த்து புலியை பார்த்து, பூனை சூடு போட்டு கொண்ட கதையாக கருணாநிதிக்கும் நூற்றாண்டு விழாவை கொண்டாட முயற்சித்தார்கள் விழா தொடங்கும் போது தடைபட்டது. புரட்சித்தலைவரின் நூற்றாண்டு விழாவை எடப்பாடியார் நடத்தினர். விளம்பரம் இல்லை மக்களின் விலாசம் இருந்தது.

ஆனால் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் விளம்பரம் தான் இருந்தது விலாசம் இல்லையென கூறினார்.  தமிழகத்தில் கடுமையான விலைவாசி உயர்வு ,சட்ட ஒழுங்கு சீர்கேடு நடைபெற்று வருகிறது.இந்த குடும்ப ஆட்சிக்கு ,சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி மலர, நடைபெறும் மாநாடு கால்கோள் மாநாடாக அமைகிறது.

RB Udayakumar has said that no progress has been made in the field of sports since Udayanidhi took charge

உதயநிதியை புகழும் ஸ்டாலின்

முன்பு உதயநிதியை அமைச்சர் புகழ்ந்தார்கள். தற்போது முதலமைச்சரே புகழ்கிறார். தற்போது விளையாட்டு துறையை எடுத்துக்கொண்டால் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்காத அவல நிலை தற்போது நடைபெற்றது.  அதேபோல் அவர் ரசிகர் மன்ற தலைவராக இருக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் துறையிலே கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 50,000  மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. அதேபோல் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 50,000 பேர் தேர்வு எழுதவில்லை. உதயநிதி வந்த பின்பு விளையாட்டு துறையில் புத்துணர்ச்சி ஏற்பட்டதாக ஸ்டாலின் கூறுகிறார். எந்த புத்துணர்ச்சியும் ஏற்படவில்லை.

RB Udayakumar has said that no progress has been made in the field of sports since Udayanidhi took charge

திமுகவிற்கு வந்த சோதனை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று கூறினார்கள் எதையும் நடக்கவில்லை. வெறும் வார்த்தை ஜாலம் மட்டும் தான் உள்ளது. ஸ்டாலின் இப்படி தன் மகனைப் புகழ்வது  நாடு எங்கே செல்கிறது என்று தெரியவில்லை. இதற்கு மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும். திமுக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்காக எதுவும் போராடவில்லை குரல் கொடுக்கவில்லை அதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் கூட மக்களுக்கு நினைவு வரவில்லை இன்றைக்கு திமுக ஆட்சிக்கு கண்டம் வந்துவிட்டது. அமலாக்கத்துறை சோதனை, வருமான வரி சோதனை என்று நடைபெற்று வருவதாக ஆர்.பி.உதயகுமார் கூறினார். 

இதையும் படியுங்கள்

திருப்பம் தருமா திருச்சி? திமுக நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை துவக்கும் ஸ்டாலின்!

Follow Us:
Download App:
  • android
  • ios