Asianet News TamilAsianet News Tamil

தனது தந்தை பெயர் இல்லாத திட்டங்களை முடக்கி வைப்பதன் ரகசியம் என்ன?ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பும் ஆர்.பி.உதயகுமார்

தனது தந்தையார் பெயரில் கோட்டங்கள், நூலகங்கள், மருத்துவமனைகள் போன்ற திட்டங்கள் தான் மின்னல் வேகத்தில் நடைபெறுகிறது. தந்தை பெயர் இல்லை என்றவுடன் திட்டங்கள் எல்லாம் முடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது இதன் ரகசியம் என்ன? என ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

RB Udayakumar has questioned why there is a delay in the implementation of public welfare programs in Tamil Nadu
Author
First Published Jul 14, 2023, 9:00 AM IST | Last Updated Jul 14, 2023, 9:00 AM IST

கலைஞர் நூலகம் திறப்பு விழா

கலைஞர் நூலக திட்டத்தை விரைந்து முடித்த முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் நல திட்டங்களை தாமதப்படுத்துவமு ஏன் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 15.7.2023 நாளை மதுரையில் கலைஞர் நூலகம் திறப்பு விழாவிற்கு வருகை தரும் முதலமைச்சருக்கு மதுரை மக்களின் சார்பாக பல்வேறு பிரச்சினைகளை, கோரிக்கைகளை கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இன்றைக்கு 205 கோடியில் கலைஞர் நூலகம் விரைவாக முடிக்கப்பட்டு திறக்க வரும் முதலமைச்சர் அதேபோல் மதுரையின் வளர்ச்சி திட்டங்களுக்கும் அக்கரை காட்ட வேண்டும். ஏழை,எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டிடப் பணிகளுக்கு இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தென் மாவட்ட மக்கள் கோரிக்கையாக உள்ளது.

RB Udayakumar has questioned why there is a delay in the implementation of public welfare programs in Tamil Nadu

திமுக அரசின் திட்டங்களின் நிலை என்ன.?

அதேபோல் முல்லைப் பெரியாறு அணைக்குறுக்கே கேரளா அரசு புதிய அணைக்கட்டபடும் என்று கூறி வருகிறது, அதை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்களின் வேதனையாக உள்ளது. மதுரை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வகையில் அம்மா ஆட்சியில் கோரிபாளையத்தில் மேம்பால திட்டமும் கொண்டுவரப்பட்டது அதேபோல், உங்கள்(திமுக)ஆட்சியில் நெல்லுப்பேட்டை வழியாக தெற்கு வாசல் விமான நிலையத்துக்கு செல்லும் வகையில் மேம்பாலமும், பெரியார் நிலையம் கோரிப்பாளையம் மேம்பாலம் பணிகளும், அதே போல் அம்மா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட மேலமடை சந்திப்பு மேம்பால திட்ட பணிகள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை என்பது மக்கள் வேதனையாக உள்ளது.

RB Udayakumar has questioned why there is a delay in the implementation of public welfare programs in Tamil Nadu

கூட்டு குடிநீர் திட்டம் என்ன ஆச்சு.?

அதேபோல் எடப்பாடியார் மதுரை மக்களின் 40 ஆண்டுகால தண்ணீர் பற்றாகுறையை போக்கும் வகையில் 1,296 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார்.அந்தப் பணிகளை விரைவாக செய்து மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும். அதேபோல் துணைக்கோள் நகரத்திட்டத்தையும் மக்கள் பயன்பாட்டிற்காக விரைவாக கொண்டு வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கடந்த தேர்தலில் போது கப்பலூர் சுங்க சுங்கச்சாவடியை மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து, அதை அகற்றுப்படும் என்று வாக்குறுதி கொடுத்தீர்கள் அதையும் நிறைவேற்றவில்லை அதேபோல், திருமங்கலம் ரயில்வே மேம்பால பணியும், திருமங்கலம் புதிய பேருந்து நிலையம் பணியும் எப்போது அமைத்துக் கொடுப்பீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

RB Udayakumar has questioned why there is a delay in the implementation of public welfare programs in Tamil Nadu

10 கோரிக்கைகளின் நிலை என்ன.?

மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்று திட்டத்தில்  நீண்ட நாள் திட்டங்களை நிறைவேற்றப்படும் என்று கூறினீர்கள் நாங்களும் தொகுதியின் திட்டங்கள் குறித்து கொடுத்துவிட்டோம் ஆனால், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை இரண்டு ஆண்டுகளாக எந்த பணிகளும் நடக்கவில்லை. தனது தந்தையார் பெயரில் கோட்டங்கள், நூலகங்கள், மருத்துவமனைகள் போன்ற திட்டங்கள் தான் மின்னல் வேகத்தில் நடைபெறுகிறது. தந்தை பெயர் இல்லை என்றவுடன் நிலையில் திட்டங்கள் எல்லாம் முடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது இதன் ரகசியம் என்ன? மதுரையில் உள்ள சேதமடைந்த சாலைகளை சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்,  ஏற்கனவே மதுரை மார்க்கெட் பகுதியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது அதன் தற்போது நிலை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

RB Udayakumar has questioned why there is a delay in the implementation of public welfare programs in Tamil Nadu

சித்திரை திருவிழா பாதிப்பு ஏற்படுமா.?

அதேபோல் மெட்ரோ ரயில்வே திட்டப் பணிகளில் பூமிக்கடியில் அமைக்கும் பொழுது, சித்திரை தேரோடும் விழா நடைபெறும் இடங்களில் எந்த இடையூறும் ஏற்படாத அமைத்திட வேண்டும் என மக்கள் கருத்தாக உள்ளது. மதுரையில் தொழில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ளாதது மக்களின் வேதனையின் குரலாக உள்ளது, நூலக திறப்பு விழாவிற்கு வரும் முதலமைச்சர், மதுரையின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து அக்கறை காட்டுவாரா? என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மோடிக்கு திமுக செய்ததை திருப்பி கொடுக்கும் பாஜக.! ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு பலூன், கருப்பு சட்டை- அண்ணாமலை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios