500 டாஸ்மார்க் கடையை மூடுவதாக கூறிவிட்டு 5,000 கடையை திறக்க திமுக திட்டம்.? இறங்கி அடிக்கும் ஆர்பி.உதயகுமார்

புதிய பேருந்து கொள்முதல் செய்தால் தானே புதிய வழித்தடத்தில் பேருந்து விட முடியும். ஏற்கெனவே பழைய வழிதடத்தை ரத்து செய்துவிட்டு, அதை புதிய வழித்தடமாக அமைச்சர்களை திருப்திப்படுத்துவதற்காக தினந்தோறும் ஒரு நகைச்சுவை காட்சி அரங்கேறுவதாக ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.

RB Udayakumar has alleged that buses are in a bad condition in the transport sector

ஆவின் நிர்வாக சீர்கேடு- அமுல் நிறுவனம் போட்டி

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,திருமங்கலம் ஒன்றியம் ஆலம்பட்டியில் உறுப்பினர் படிவம் திரும்ப பெறும் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில்,  மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயளாலரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் ஆவின் கொள்முதல் ,உற்பத்தி அதிகரித்து இருந்தது. தற்போது ஆவின் நிர்வாக சீர்கேடால் அமுல் நிறுவனம் தமிழகத்தில் நுழைந்துள்ளது. போக்குவரத்து துறையில் ஒன்னரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது 20,000 காலி பணியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  அது மட்டுமின்றி உதிரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாக 2,000 பேருந்துகள் செயல்படாமல் முடங்கிய நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். 

RB Udayakumar has alleged that buses are in a bad condition in the transport sector

மோசமான நிலையில் போக்குவரத்து துறை

மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படாததால், பணியிடங்களுக்கு செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டியதால் தனியார் அரசு பேருந்து கட்டணம் செலுத்தி தான் இன்றைக்கும் செல்கிறார்கள். இதுதான் இன்றைய எதார்த்தமான நிலைமையாக இருக்கிறது.  அமைச்சர்கள் புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்கள். புதிய பேருந்து கொள்முதல் செய்தால் தானே  புதிய வழித்தடத்தில் பேருந்து விட முடியும். ஏற்கெனவே பழைய வழிதடத்தை ரத்து செய்துவிட்டு, அதை புதிய வழித்தடமாக அமைச்சர்களை திருப்திப்படுத்துவதற்காக  ஒரு நகைச்சுவை காட்சி அரங்கேற்றமும் தினந்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது.

RB Udayakumar has alleged that buses are in a bad condition in the transport sector

 5000 ஆயிரம் டாஸ்மாக் கடையை திறக்க திட்டம்

பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே இவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்று சொன்னால், பள்ளிகள், கல்லூரிகள் திறந்து விட்டால் மாணவர்கள் செல்வதற்கு மிகப்பெரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் 25 பேர் பலியாகியுள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்தவர், இதனால் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஆனால் மாற்று வழிவில் 5000 கடையை திறந்து விட திட்டமிடுவதாகவும் கூறினார்.  மேலூரில் கூட டாஸ்மாக்கில் மது குடித்து ஒருவர் பலியாகி உள்ளார் மற்றொரு உயிர் ஊசலாடி கொண்டிருக்கிறது. 

RB Udayakumar has alleged that buses are in a bad condition in the transport sector

வாய் திறக்காத முதலமைச்சர்

அதேபோல் ஒரு மாணவி தன் தந்தையின் குடியை நிறுத்த கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்டார். இது போன்ற நிகழ்வுகளால் தமிழகம் தலை குனிந்து உள்ளதாக தெரிவித்தார். காவிரி பிரச்சனைக்காக 21 நாட்கள் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவை முடக்கி வெற்றி பெற்றார்கள்  இப்போது மேகதாது பிரச்சனையில் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைதியாக உள்ளனர். 30 ஆயிரம் கோடி குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை, கள்ளச்சாராயம் மது குறித்து வாய்திறக்கவில்லை, மேகதாது அணை குறித்து வாய் திறக்கவில்லை என விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

வேளாண் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரிப்பது விவசாயிகளுக்கு திமுக செய்யும் பச்சை துரோகம்..! எச்சரிக்கும் சீமான்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios