கானல் நீராக காட்சியளிக்கும் தேர்தல் அறிக்கை.! இரட்டை வேடம் போடும் திமுக- ஆர்.பி.உதயகுமார் ஆவேசம்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் அதிகமான சாலை விபத்து  ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஆர்.பி.உதயகுமார், சாலை கட்டமைப்புகளை, மேம்படுத்துவதில் திமுக தோல்வி அடைந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

RB Udayakumar has accused DMK of playing a double role in the 8 lane project

மோசமான சாலைகள்

சாலை வசதிகள் சரிவர மேற்கொள்ளப்படாத காரணத்தால், உயிரிழப்பு ஏற்படுவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிலேயே இன்றைக்கு நாள்தோறும், வாகனங்கள்  எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதே வேளையிலே சாலை விபத்தும், அதிகமான உயிர் பலியும் வருவதை வேதனை செய்தியாக நாம் பார்க்கிறோம். தமிழ்நாட்டிலே மாநில நெடுஞ்சாலை 11,273 கிலோ மீட்டர் நீளமும்,  அதேபோல தேசிய நெடுஞ்சாலை நீளம் 6,666 கிலோமீட்டர் சாலை உள்ளது. இதை தவிர கிராம சாலைகள், ஊரக சாலைகள்  உள்ளன கழக 51 ஆண்டுகளிலே, 31 ஆண்டுகளுக்கு மேல்,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசிலே, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா, எடப்பாடியார்  ஆகியோர் காலத்தில் சாலை கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

பலவீனப்பட்டு வரும் அதிமுக..! வழக்குகளுக்கு பயந்து தீய சக்திகளிடம் சமரசம் செய்த துரோகிகள்-டிடிவி தினகரன் ஆவேசம்

RB Udayakumar has accused DMK of playing a double role in the 8 lane project

தொடரும் உயிரிழப்பு

2022 ஆம் ஆண்டில் மட்டும் சாலை விபத்தில் 12,032 பேர் உயிரிழந்திருக்கிறார்கள், என்கிற வேதனையான செய்தி வருகிறது.சாலை பாதுகாப்பு வாரம், சாலை விழிப்புணர்வு என்பது ஒரு புறத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இது கடந்தாண்டு 2021யை ஒப்பிடுகிற போது, இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது .இந்த திமுக அரசு சாலைகளை  பாதுகாப்பதில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், சாலைகள் கட்டமைப்புகளை உருவாக்கி தருவதில் தோல்வி அடைந்திருக்கிறது. மொத்த உயிரிழப்புகளிலே ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் போன்ற இருசக்கர வாகனங்களில் 42 சதவீதம் அதாவது, 7,392 உயிரிழப்புகள் ஏற்பட்டதை நாம் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

RB Udayakumar has accused DMK of playing a double role in the 8 lane project

அபராத வசூல்- ஹெல்மெட்

 ஒரு புறத்தில் ஹெல்மெட் போடவில்லை என்று, பகல் கொள்ளையாக, பொருளாதார சுரண்டலாக, கூலி வேலை பார்க்கிற  தொழிலாளி இடத்திலே பத்தாயிரம் ரூபாய் அபராத கட்டணம் என்று சொல்லி ஒரு பொருளாதார சுரண்டல்கள்  நடைபெறுகிறது. விபத்துக்கு காரணம்  ஓட்டுபவர்கள் கவனக்குறைவு, அதிவேகமாக செல்லுதல், தூங்கி விடுதல் என்று நாம் வைத்துக் கொண்டாலும், சாலை மேம்பாடு செய்யாமல் இருப்பது தான் மிகப்பெரிய பிரதான காரணமாமாக உள்ளது. குண்டும், குழியுமாக இருக்கிற சாலைகள், சரியான வடிவமைப்பு இல்லாத சாலைகள், உரிய பராமரிப்பு இல்லாத சாலைகள், இவைகள் தான் இன்றைய சாலை விபத்துகளுக்கு பிரதான முக்கிய காரணமாக உள்ளது.

RB Udayakumar has accused DMK of playing a double role in the 8 lane project

கானல் நீராக தேர்தல் அறிக்கை

இதே மதுரையில் பறக்கும் பாலம் திட்டத்தை கூட மத்திய அரசிடம் பெற்று தந்தவர் எடப்பாடியார், திராவிட முன்னேற்றக் அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி தடங்களாக நிறைவேற்றப்படும் என்று சொன்னார்கள், முக்கிய இருவழிச் சாலைகள், நான்கு வழிச்சாலைகளாகவும், நான்கு வழிச்சாலைகளில், ஆறு வழிச்சாலைகளாகவும், போக்குவரத்துக்கு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கையிலே தேர்தல்அறிக்கை எண்களான  429, 430,  431, 432 ,433 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சாலை திட்டங்கள் கானல் நீராக காட்சியளிக்கிறது. இதுவரை திமுக தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள, சாலை போக்குவரத்து திட்ட தேர்தல் அறிக்கையில் செய்துள்ள பணிகளை, வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். 

RB Udayakumar has accused DMK of playing a double role in the 8 lane project

திமுக இரட்டை வேடம்

இன்னைக்கு ஏற்படுகின்ற சாலை விபத்துகளை, ஏற்படுகிற உயிரிழப்புகளை தடுக்க இந்த அரசு முன்வருமா ?நடவடிக்கை எடுக்குமா? இந்த அரசு மெத்தனப் போக்கினால் தொடர்ந்து இதுபோன்ற நிலை இருக்குமானால் எடப்பாடியாரின் மேலான கவனத்திற்கு எடுத்துச் சென்று இது குறித்து உரிய போராட்ட அறிவுப்புகளையும் வெளியிடுவதற்கு நாங்கள் தயங்க மாட்டோம். எடப்பாடி ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 8 வழி சாலைகளை எதிர்த்து, போராட்ட களத்தை தூண்டிவிட்டார்கள் என்பது நாடறிந்த உண்மை. ஆனால் இப்போது நிலைமை என்ன? நீங்கள் ஆளுகிற கட்சியாக இருக்கும்போதும், எதிர்க்கட்சியாக இருந்த போதும் நீங்கள் போடுகிற  இரட்டை வேடத்தை மக்கள் புரிந்து கண்டிருக்கிறார்கள் என்று கூறினார். 

இதையும் படியுங்கள்

தனித்து போட்டியிட்டால் பாஜக டெபாசிட் வாங்காது ..! அண்ணாமலையை சீண்டிய அதிமுக மாஜி அமைச்சர்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios