Asianet News TamilAsianet News Tamil

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வருகிறது 1000 ரூபாய்... முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு..!

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 22ம் தேதி முதல் வீடுகளுக்கே சென்று 1,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

Ration card holders send 1000 rupees...CM Edappadi palanisamy
Author
Tamil Nadu, First Published Jun 16, 2020, 3:42 PM IST

முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 22ம் தேதி முதல் வீடுகளுக்கே சென்று 1,000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். 

கொரனோ பாதிப்பைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 5ம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

Ration card holders send 1000 rupees...CM Edappadi palanisamy

இந்நிலையில், மருத்துவக்குழுவினர் ஆலோசனைப்படி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த தமிழக அரசு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

Ration card holders send 1000 rupees...CM Edappadi palanisamy

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்:- கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வருகிற 19-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 12 நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ரேசன் குடும்ப அட்டைக்காரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாரண தொகையான ரூ.1000 வருகிற 22-ம் தேதி முதல் ரேசன் குடும்ப அட்டைத்தாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios