இந்தியா- சீனா லடாக் எல்லை பிரச்சனையில் இந்திய இராணுவத்தினர் 3 நபர் உயிரிழந்துள்ளனர். இந்திய வீரர்கள் எல்லை தாண்டி சீன வீரர்களை தாக்கினர். நாங்கள் தாக்கியது துப்பாக்கியால் அல்ல... கற்களால் தான் என இந்த தாக்குதலுக்கு சீனா காரணம் கூறியுள்ளது. 

இந்திய சீனா எல்லையில் நடந்த கலவரத்தில், இராமநாதபுரம் மாவட்டம்,  R.S.மங்களம் தாலுகா, கடுக்கலூர் கிராமத்தின் தொண்டிராஜ் அவர்களின் பேரனும், காளிமுத்து மகனுமான பழனி இந்திய-  சீன எல்லையில் நடந்த கலவரத்தில், உயிரி நீத்தார். மேலும் இரு இந்திய வீரர்களும் பலியாகினர். இந்திய வீரர்கள் எல்லை தாண்டி வந்து சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சீன வெளியுறவு அமைச்சர் கூறியதாக, அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் கூறியதாக, அந்நாட்டின் குளோபல் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட செய்தியில், ‘’இரு நாடுகளுக்கு இடையே, இருந்த ஒரு மித்த கருத்தை மீறி இந்திய வீரர்கள் இரண்டு முறை எல்லை தாண்டி வந்து, சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதினால், கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக, இந்தியாவிடம் புகார் தெரிவிக்கப்பட்டதுடன், இந்திய ராணுவம் எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்துவதுடன், எல்லைபிரச்னையை சிக்கலாக்கும் வகையில் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என தெரிவித்துள்ளோம்.

எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கவும், எல்லை பகுதிகளில் அமைதி நிலவவும் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம் என இந்தியா, சீனா நாடுகள் முடிவு செய்துள்ளன’’ என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.