மூச்சுக்கு முன்னூறு தடவை நான் விவசாயி என்று சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டமசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்று விமர்சனம் செய்தார்.அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக "ஸ்டாலினுக்கு விவசாயம்'ன்னா என்னா'ன்னு தெரியுமா? என நக்கலடித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பற்றி ஆலோசித்த பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, "ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,617 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. ராமநாதபுரத்தில் கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் குறைதீர்ப்பு திட்டத்தில் பெறப்பட்ட 9,302 மனுக்களில் 5,180 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ரூ.345 கோடியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை அமைய உள்ளது" என ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசின் திட்டங்களின் செயல்பாடுகளை புள்ளிவிவரங்களை அடுக்கினார்.

 மேலும் நான் விவசாயிதான்; தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத்தான் விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது. அ.தி.மு.க ஆட்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலினால் எந்த குறையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை கொண்டுவர முனைப்பு காட்டியவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தவர் மு.க.ஸ்டாலின்தான்" என அடுக்கடுக்காக ஸ்டாலினின் விவசாய விரோத போக்கை பற்றி பேசினார்.