திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியவற்றை தொகுத்து மீண்டும் நினைவு படுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். 

இதுகுறித்து அவர் தனது டவிட்டரில், ’’திமுககாரன் கோயிலுக்கு போகாவிட்டால் அய்யருங்களுக்கே வருமானம் கிடையாது. அய்யர் போனால் ரூ.5 கொடுப்பான், திமுக வட்ட செயலாளர் போனால் ரூ.100 போடுவான்,  கவுன்சிலர் ரூ.500 போடுவான். எம்.எல்.ஏ ரூ.1000 போடுவான். கேஎன் நேரு போன்றவர்கள் ரூ.5000 போடுவார்கள். ஆக நாம் போடும் துட்டில் தான் அய்யர்களே வாழ்கிறார்கள்! 

இந்த டிவிகாரனுங்க இருக்கிறானுங்க பாருங்க, அவனுங்க மாதிரி அயோக்கியனுங்க உலகத்துல வேறு எவனும்  கிடையாது. ரெட்லைட் ஏரியா போன்று தான்  டிவிய நடத்துறானுங்க. காசுக்காக எதைப்பற்றி வேண்டுமானாலும் கிளப்பி உடுவானுங்க. மற்ற மாநிலங்களில் உள்ளவனெல்லாம் முட்டாள்கள். வட மாநிலங்களில் இருப்பவனுங்களுக்கு அறிவே கிடையாது. இதை நான் ஓபனாக சொல்கிறேன்.

மத்திய பிரதேச ஐகோர்ட்டில் ஒரு அரிஜன் கூட நீதிபதி கிடையாது. இங்கு வரதராஜனை நீதிபதியாக கலைஞர் உட்கார வைத்தார். அதன்பின் 7,8 ஆதிதிராவிடர்கள் ஐகோர்ட் நீதிபதிகளாக இருந்தார்கள் என்றால் அது திராவிட இயக்கம் ஆதிதிராவிடர்களுக்கு போட்ட பிச்சை. சுப்ரீம் கோர்ட் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூடாரமாகி விட்டது. நான் ஒரு வக்கீலாக இருந்தாலும், இதை நான் சொல்லியாக வேண்டும்’’என ஆர்.எஸ்.பாரதி சொன்னதை பதிவிட்டிருக்கிறார் ராமதாஸ்.