கனலரசனை சமாதானப்படுத்தும் விதமாக வன்னியர் சங்கத் தலைவர் மறைந்த காடு வெட்டி குருவின் மணிமண்டபத்தை இன்று ராமதாஸ் திறந்து வைத்தார்.  அந்த விழாவில் குடும்பப் பிரச்னையால் மனஸ்தாபத்தில் இருந்த காடுவெட்டி குருவின் தாயார், மனைவி, கனலரசன் ஆகியோர் பங்கேற்றது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.  

அரியலூர் மாவட்டம், காடுவெட்டியில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தில் காடுவெட்டி குருவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு ஆளாகி உயிர்த்தியாகம் செய்த 21 ஈகியர்களுக்கும் மரியாதை செய்யப்பட்டது. 

முன்னதாக, ‘’பாமகவின் மூத்த தலைவராக இருந்த எனது தந்தை காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானது அல்ல. இந்த மரணத்துக்கு காரணமான பாமக தலை மைக்கு வன்னியர் சமுதாயம் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று காடுவெட்டி குருவின்  மகன் கனலரசனும் அவரது குடும்பத்தினரும் ஆவேசத் துடன் கூறினர். குருவின் மறை விற்குப் பின்னால், பாமக தலை மையின் பங்கு இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டி வந்தனர். 

 காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், அவரது சகோதரி மீனாட்சி, தாய் ஆகியோர் கூட்டாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, “பாமக தலைமையை நம்பி இருந்த எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மரணம் இயற்கையானதல்ல. ‘ஸ்லோ பாய்சன்’ கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. வன்னியர்கள் பாமகவுக்கு இந்தத் தேர்தலில் பதில் சொல்லுவார்கள் என்றெல்லாம் பரபரப்பாக குற்றம்சாட்டினர். 

இந்நிலையில் காடுவெட்டி குருவின் குடும்பத்தை சமாதானப்படுத்தும் விதமாக அவருக்கு மணிமண்டபத்தை கட்டி அவர்களது குடும்பத்தினரை ஒட்டு மொத்தமாக சமாதானப்படுத்தி அவர்கள் தங்கள் வசம் தான் என்பதை நிரூபிக்க மணி மண்டபம் திறப்பு விழாவில் முறுக்கிக் கொண்டு திரிந்த குடும்பத்தினர் விழா மேடையில் அருகருகே  அமர வைக்கப்பட்டு இருந்தனர்.