குடிமகன்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக டாஸ்மாக் கடைகளும் பூட்டப்பட்டுள்ளது. இதனால், குடிமகன்கள் தடுமாறி வருகின்றனர். அதேவேளை கடந்த 33 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தும் குடிமகன்கள் பழக்கத்தை கைவிட முடியாமல் பரிதாகப்பாதிக்கப்படவில்லை. ஆகையால் மதுக்கடைகளை மூட இதுதான் சரியான சந்தர்ப்பம் என பலரும் கருத்து கூரி வருகின்றார்.

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், ’மதுக்கடைகள் முடிந்த கதையாகட்டும். மகிழ்ச்சி மட்டும் தொடர் கதையாகட்டும்...’தமிழகத்தில் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படும் நாளில் இருந்து, முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். 

புதிய கொரோனா தொற்றுகள் இல்லை என்ற செய்திகள் பிற மாவட்டங்களில் இருந்தும் வரவேண்டும். நிறைவில் தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக மாற வேண்டும். அதற்கு தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஊரடங்கையும், சமூக இடைவெளியையும் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக புதிய நோய்த்தொற்றுகள் இல்லை. 6 மாவட்டங்களில் 10 நாட்களாக நோய்த்தொற்றுகள் இல்லை. இது கொரோனா இல்லாத தமிழகத்தை நோக்கிய முன்னேற்றம். சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மக்கள், மருத்துவர்கள், அதிகாரிகள், காவல்துறையினருக்கு பாராட்டுகள்’’எனத்  தெரிவித்துள்ளார். இந்த கருத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான குடிமகன்களை கதற வைத்துள்ளார் ராமதாஸ்.