Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் கடை மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறையுங்கள்..! தமிழக அரசுக்கு அட்வைஸ் செய்யும் ராமதாஸ்

சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். அது தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நல்ல தொடக்கமாக அமைய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Ramadoss urges Tasmac to reduce liquor sale hours
Author
First Published Jan 6, 2023, 12:46 PM IST

முழு மதுவிலக்கு

முழு மதுவிலக்கு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரசு மதுக்கடைகளின் மது விற்பனை நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும்;  மது அருந்துவதற்கு உரிமம் பெறும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு பரிந்துரை வழங்கியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்ப்பார்ப்புக்கு இது குறைவு தான் என்றாலும், முழு மதுவிலக்கை ஏற்படுத்துவதற்கு நல்ல தொடக்கமாக இருக்கும் என்ற அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.

சமூக நீதி ஆட்சி என சுயதம்பட்டம் அடிக்கும் திமுக.! ஆதித்தமிழ்க்குடிகளை வஞ்சிப்பதுதான் திராவிட மாடலா ? - சீமான்

Ramadoss urges Tasmac to reduce liquor sale hours

தெருவுக்கு தெரு மதுக்கடை

மது கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு  சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் ஊடுருவியிருக்கிறது. பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்தில் மக்கள் மத்தியில் மது அருந்தி செல்லும் காட்சிகள் வாடிக்கையாகி விட்டன. பள்ளிக்கூடங்களில் மாணவிகள் மது அருந்தி மயங்கி விழும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. நகர்ப்புற பகுதிகளில் ஒரு மாணவர் அவரது பள்ளிக்கு ஒரு கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்றால், அதற்குள்ளாக அவர் 3 மதுக்கடைகளை  கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. தெருவுக்குத் தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டு எந்த சிரமுமின்றி, தாராளமாக மது கிடைப்பது தான் சிறுவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதற்கு காரணம் ஆகும்.மதுக்கடைகளில் 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது; அதுகுறித்த அறிவிப்பு பலகை மதுக்கடைகளின் முகப்பில் வைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து  வலியுறுத்தி வருகிறது.

Ramadoss urges Tasmac to reduce liquor sale hours

விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும்

ஆனால், எந்தக் கடையிலும் அத்தகைய அறிவிப்பு பலகைகள் இன்றைய நிலையில் வைக்கப்படவில்லை. 21 வயதுக்கும் குறைவானவர்களுக்கு தடையின்றி மது விற்பனை செய்யப்படுகிறது. மதுக்கடைகளில் மது விற்பனை நண்பகல் 12.00 மணிக்கு தொடங்குவதால் பலர் மது அருந்திவிட்டு பணிக்கு செல்வதில்லை. அதேபோல், இரவு 10.00 மணி வரை மதுக்கடைகள் திறந்திருப்பதால் இரவு நேரங்களில் சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.  சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருப்பதைப் போன்று, பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை  மது விற்பனை நேரத்தை குறைத்தால் மதுவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்; இரவு நேரங்களில் சாலை விபத்துகளும் குறையும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.

அண்ணாமலையில் நாகரீகமற்ற செயல்..! அவராக‌ திருந்தவில்லை..!அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா?-சிபிஎம்

Ramadoss urges Tasmac to reduce liquor sale hours

6 மணி நேரமாக குறைத்திடுக

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படும் போதெல்லாம், 2021 தேர்தலில் அது குறித்த வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்று கூறி அரசு நழுவிக்கொள்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் அத்தகைய வாக்குறுதியை திமுக அளிக்கவில்லை என்றாலும் கூட, முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதன்முறையாக தில்லி சென்று பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப் படும் என்று உறுதியளித்தார்.

மதுவிலக்கை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது என்பது தான் அதன் பொருள்.எனவே, சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு தமிழகத்தில் மது விற்பனையை 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். அது தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த நல்ல தொடக்கமாக அமைய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் எப்போது..! இரட்டை இலை சின்னம் யாருக்கு சொந்தம்.? காத்திருக்கும் டுவிஸ்ட்

Follow Us:
Download App:
  • android
  • ios