அண்ணாமலையின் நாகரீகமற்ற செயல்..! அவராக‌ திருந்தவில்லை..!அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா?-சிபிஎம்

அண்ணாமலையில் கை கடிகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்காமல்,  விமானத்தின் பாகங்களில் செய்த கடிகாரம், இதை கட்டுவதுதான் தேச பக்தி என்று எதையெதையோ கதைகட்டியதாக கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.
 

The Marxist-Communist condemned the uncivilized speech at Annamalai

அண்ணாமலையும் பத்திரிக்கையாளர்களும்

பத்திரிக்கையாளர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலளார் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஜக தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கையாளர்களிடம் முதிர்ச்சியற்று  நடந்துகொண்டதை பார்த்தேன்.பாஜகவில் இருந்தவரான காயத்திரி ரகுராம் உள்ளிட்ட பலரும் எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் - பாஜகவில் செயல்படும்  பெண்களுக்கு எதிரான ஒழுக்கக் கேடு தொடர்பானவை மட்டுமல்ல, சட்டப்படி கிரிமினல் நடவடிக்கைக்கு உரியவை. அது பற்றி ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு நாகரீகமான முறையில் பதில் கொடுத்திருக்க முடியும். ஆனால் அதனை விடுத்து எதை எதையோ பேசி வம்பு வளர்த்திருப்பது உறுத்தலாக இருக்கிறது. 

ராட்சசியை அறிமுகம் செய்து நாட்டை நாசமாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு! ஜெ.குறித்து அமைச்சர் KKSSR கடும் தாக்கு

The Marxist-Communist condemned the uncivilized speech at Annamalai

தேவையில்லாமல் கதை விடும் அண்ணாமலை

சில நாட்கள் முன்பு அவர் கட்டியிருக்கும் கைக் கடிகாரம் எப்படி வாங்கப்பட்டது என்ற கேள்வி வந்தது. இந்த தேதியில், இவ்வாறு வாங்கினேன் என்று எளிதாக பதில் சொல்லியிருக்க முடிந்த கேள்விதான் அது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் விமானத்தின் பாகங்களில் செய்த கடிகாரம், இதை கட்டுவதுதான் தேச பக்தி என்று எதையெதையோ கதைகட்டினார். ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம், மாநில கல்வி நிறுவனங்களின் முடிவில் மூக்கை நுழைத்தல், நிதி ஒதுக்கியும் கட்டுமானப் பணிகள் தொடங்காத மதுரை எய்ம்ஸ், அதலபாதாளத்தில் நாட்டின் பொருளாதாரம் என்று அடுக்கடுக்கான கேள்விகளை அவரிடம் எழுப்ப வேண்டியுள்ளது. 

அண்ணாமலையை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வீடியோ… நடவடிக்கை எடுக்க பாஜகவினர் வலியுறுத்தல்!!

The Marxist-Communist condemned the uncivilized speech at Annamalai

பாஜகவாவது திருத்துமா.?

ஒன்றிய அரசில் இருக்கிறோம் என்ற பொறுப்பே இல்லாமல், அடிப்படை நாகரீகமும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக கூச்சல் எழுப்புவது மக்களின் அறிந்துகொள்ளும் உரிமையை‌ காலில் போட்டு மிதிப்பதாகும். ஊடகங்களை மிரட்டியும், உருட்டியும் வரும் போக்கினை பத்திரிக்கையாளர் சங்கங்கள் பல முறை கண்டித்துள்ளன. அவர்‌ திருந்தவில்லை. அவர் சார்ந்துள்ள கட்சியாவது திருத்துமா? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ் தாயாருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios