Asianet News TamilAsianet News Tamil

ரூ.1000, 500 தாள்களின் மதிப்பு எவ்வளவு? முன்னுக்கு பின் முரணாக மத்திய அரசு தகவல் அளிப்பது ஏன் - ராமதாஸ் கேள்வி

ramadoss statement-abt-money
Author
First Published Dec 20, 2016, 3:35 PM IST


இந்தியாவில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 தாள்கள் விவகாரத்தில் எவ்வளவு மதிப்பு எனபதில் மூன்றுவித தொகை அறிவிப்பது ஏன்? என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தியாவில் கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்குடன் ரூ.1000, ரூ.500 தாள்கள் நவம்பர் 8-ஆம் தேதி நள்ளிரவு முதல் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த போது பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வரவேற்றன. 

மத்திய அரசின் இந்நடவடிக்கையாயால் சுமார் ரூ.3 லட்சம் கோடி முதல் ரூ.5 லட்சம் கோடி வரை கருப்புப் பணம் ஒழிக்கப்படும்; அந்த பணத்தின் மதிப்பு அரசின் கணக்கில் சேர்க்கப்படும் என்று ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 

ramadoss statement-abt-money

ரூ.1000, ரூ.500 தாள்கள் செல்லாது என்று நவம்பர் 8&ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த  சிறிது நேரத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி அன்றைய தேதியில் புழக்கத்தில் இருந்த பழைய தாள்களின் மதிப்பு ரூ.14.95  லட்சம் கோடி ஆகும் (The Reserve Bank of India (RBI) estimates that there are 16.5 billion 500 rupee notes and 6.7 billion 1000 rupee notes currently in circulation). 

அதன் பின்னர் நவம்பர் 29-ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு விடையளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால்,‘‘ நவம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கியால் புழக்கத்தில் விடப்பட்டிருந்த பழைய தாள்களின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடி  (There were 17,165 million pieces of Rs 500 notes  and 6,858 million pieces of Rs 1,000 notes (Rs 8.58 lakh crore in Rs 500 notes and Rs 6.86 lakh crore in Rs 1,000) in circulation on November 8, 2016)’’ என்று தெரிவித்திருந்தார். இந்த இரு புள்ளி விவரங்களுக்குமிடையே வேறுபாடு இருந்தாலும், வித்தியாசத்தின் மதிப்பு அவ்வளவு அதிகமாக இல்லை.

ஆனால், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்டதாகக் கூறி நேற்று வெளியிடப்பட்ட தகவல், முந்தைய புள்ளிவிவரங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளது.  மும்பையைச் சேர்ந்த அனில் கல்காலி என்ற சமூக ஆர்வலர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி பெற்ற தகவல்களில், ‘‘நவம்பர் 8-ஆம் தேதி நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுகையில்  ரூ.9.13 லட்சம் கோடி மதிப்புக்கு ரூ.1000 தாள்களும்,  ரூ.11.38 லட்சம் கோடி மதிப்புக்கு ரூ.500 தாள்களும் இருந்தன (On November 8, it had Rs 9.13 lakh crore in 1,000 rupee notes while Rs 11.38 lakh crore in 500 rupee notes.)’’ என்று கூறப்பட்டிருக்கிறது.

ramadoss statement-abt-money

 அதாவது ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நாளில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் ரூ.20.51 லட்சம் கோடி இருந்ததாக இந்த தகவல் தெரிவிக்கிறது.

மேற்கண்ட மூன்று தகவல்களுமே இந்திய ரிசர்வ் வங்கியில் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி இருந்த ரூ.1000, ரூ.500 தாள்களின் மதிப்பு எவ்வளவு என்பது குறித்தவை தான். இவற்றில் இரு தகவல்கள் இந்திய ரிசர்வ் வங்கியாலும், ஒரு தகவல் மத்திய நிதியமைச்சராலும் வழங்கப்பட்டவை. 

பழைய ரூபாய் தாள்களை வங்கியில் செலுத்துவதற்காக விதிக்கப்பட்டுள்ள புதியக் கட்டுப்பாடுகள் கூட இதை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கலாம் என்ற ஐயத்தையும் புறந்தள்ள முடியவில்லை.

கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நாளில் ரிசர்வ் வங்கி ஆளுகையில் இருந்த பணத்தின் மதிப்பு குறித்து முன்னுக்குப்பின் முரணான கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில், அது குறித்த உண்மை நிலையை மத்திய அரசு விளக்க வேண்டும். அத்துடன், புதிய ரூபாய் தாள்களை  அதிக அளவில் வெளியிட்டு பணத் தட்டுப்பாட்டையும், மக்களின் அவதியையும் போக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios