Asianet News TamilAsianet News Tamil

கத்தி முனையில் பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சி... விரட்டியடித்த 13 வயது ’திரெளபதி’க்கு ராமதாஸ் பாராட்டு..!

கத்தி முனையில் பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற மிருகத்தை அடித்து விரட்டிய 13 வயது மாணவிக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

Ramadoss praises 13-year-old telepathy for raping 13-year-old
Author
Tamil Nadu, First Published Mar 6, 2020, 1:08 PM IST

கத்தி முனையில் பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற மிருகத்தை அடித்து விரட்டிய 13 வயது மாணவிக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 

அமைந்தகரை முத்து மாரியம்மன் காலனி பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி நேற்று வீட்டு மாடியில் இருந்தார். அப்போது கீழ் வீட்டில் வசிக்கும் நித்யா என்ற வாலிபர் மாணவியிடம் காதலை கூறியுள்ளார். இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்து காதலை ஏற்க மறுத்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த நித்யா திடீரென மறைத்து வைத்திருந்த கத்தி முனையில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அப்போது அந்த மாணவி அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது. 

Ramadoss praises 13-year-old telepathy for raping 13-year-old

இதுகுறித்து ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கத்தி முனையில் பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற மிருகத்தை அடித்து விரட்டிய 13 வயது மாணவிக்கு பாராட்டுகள். மாணவிகளுக்கு இத்தகைய துணிச்சலும், பயிற்சியும் மிகவும் அவசியம். துணிவில் இம்மாணவியும் திரௌபதி தான்!

சென்னையில் அரசு பள்ளியில் கற்றுக் கொடுக்கப்பட்ட தற்காப்பு கலையின் உதவியுடன், கத்தி முனையில் பாலியல் தாக்குதல் நடத்த முயன்ற மிருகத்தை அடித்து விரட்டிய 13 வயது மாணவிக்கு பாராட்டுகள். மாணவிகளுக்கு இத்தகைய துணிச்சலும், பயிற்சியும் மிகவும் அவசியம். துணிவில் இம்மாணவியும் திரௌபதி தான்!

Ramadoss praises 13-year-old telepathy for raping 13-year-old

கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க மாணவர் அமைப்பை உருவாக்க வேண்டும் என்று யு.ஜி.சி கூறியிருப்பது மிகச்சரியான நடவடிக்கை ஆகும். போதையில் சிக்கி மாணவர்கள் சீரழிவதை தடுக்க இது மிகவும் அவசியம். யு.ஜி.சிக்கு பாராட்டுகள்!

 

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 8 இடங்களில் வேளாண் உணவு பதன திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்த திட்டங்கள் உழவர்களின் வருமானம் பெருக உதவுவதுடன், 8000 புதிய வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்தும்’’என அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios